பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 நற்றிணை

போது அக்குரல் கேட்டு வருந்துகிருள். கொடிது அக் குயில் எனக் கோபிக்கிருள் ஆற்றில் நீர் தெளிந் தோடும் அழகிய காட்சியைக் கண்டு மகிழ்ந்தவள் ; காணத் துடித்தவள் ; அதை இப்போது கண்டு கண்ணிர் விட்டுக் கலங்குகிருள் ; ஆற்றவும் கொடிய ஆறே ! என அதைப் பழிக்கிருள். மாலையில் மலர்மகளே எதிர்நோக்கி மணிக்கணக்காகக் காத்துக் கிடந்தவள்; அவளேக் கண்டு அவள்பால் மலர்பெற்று மகிழ்ந்தவள் : இப்போது மலர் விற்கும் அவள் குரல் கேட்கவும் வெறுக்கிருள். இவ்வளவு மாறுதலுக்கும் காரண்ம், கணவன் அருகில் இல்லா மையே என்னே அம்மகளிர் மாண்பு ! - ! இன்று நல்ல படம் ; நாளேக்கு அது இல்லையாம் ; இன்று உங்களால் வர முடியாது ; அதற்காக, நான் அதை இழந்துவிடக் கூடாது , நான் மட்டும் சென்று பார்த்து வருகிறேன்” எனக் கூறும் மங்கையர் எங்கே ! o கணவன் இல்லாத காலத்தில், தெருவழியாகச் செல்லும் மலர்மகளைக் காணவும் வெறுக்கும் அம்மகளிர் எங்கே !.

அழுந்துபடு விழுப்புண் வழும்பு வாய்புலரா எவ்வ நெஞ்சத்து எஃகு எறிந்தாங்குப், பிரிவில புலம்பி நுவலும் குயிலினும் தேறுநீர் கெழீஇய ஆறுநணி கொடிதே; அதனினும் கொடியாள் தானே, மதனில் துய்த்தலே இதழ பைங்குருக்கத்தி யொடு பித்திகை விரவுமலர் கொள்ளிரோ என வண்டுசூழ் வட்டியள் திரிதரும் தண்டலை உழவர் தனிமட மகள்ே.'1 1. நற்றிண்ை:97, ாேன்விடுதி. . . . . – , , , அழுந்துபடு விழுப்புண் - ஆழ்ந்த பெரிய புண். வழும்பு - நிணம்: எவ்வம்-துன்பம். எஃகு-வேல், புலம்பிவருந்தி. துவலும்-கூவும். தேறு. நீர்-தெளிந்த நீர் கெழீஇயநிறைந்த மதனின்-அழகுடைய துய்த்தலே. மெல்லிய வட்டி-மலர்க்கடை, - - “ -