பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனையற மாட்சி மிக்க மனைவி 198

கணவன் புகழ் விரும்பும் காதலி :

தானும் தன் காதலனும் பிறர் புகழ வாழ்தல் வேண்டும் தன் இல்லற வாழ்வு இறவாப்புகழ் உடைய தாதல் வேண்டும் என விரும்புவாள் எவளோ, அவளே சிறந்த மனேவியாவாள் ; அத்தகையாளே மனேவியாகப் பெற்றவன், புகழால் நிறைந்த பெருவாழ்வு வாழ்வன் : ஆகவே மனைவியாவாள், அத்தகைய புகழ் விரும்பியாதல் வேண்டும் ; புகழ் புரிந்த இல் இலோர்க்கு இல்லே, இகழ்வார்முன் ஏறுபோல் பீடுநடை ‘ என்றார் வள்ளுவர். கணவன் புகழ் நிறைந்த பெருவாழ்வு வாழவேண்டும் எனும் ஆர்வம் உடையவள் அக்காலத் தமிழ்ப்பெண் ; ஒருவன் ஒரு பெண்ணக் காதலித்தான் ; ஆல்ை விரைந்து வந்து மணம் செய்து கொண்டிலன் , அதனல் அப்பெண் வருந்தினுள். அங்கினேவு மிகுதியால், அவள் உடல் நலம் கெட்டது; ஒருநாள் தன் தோழியை அழைத்தாள் : “ தோழி அவரை மணந்து, அவரோடு மனயறம் மேற்கொண்டு வாழ்ந்து, அக்கால, அவர் எம் விடு நோக்கி வரும் பரிசிலர்க்கு வாரி வாரி வழங்க, அவர்பால் பெரும் பொருள்பெற்ற அப் பரிசிலர், பண்பு களால் நிறைந்தவர் அவர் ; பேரன்பு வாய்ந்தவர் அவர் என அவரைப் புகழ்ந்து கூறும் புகழ் உரைகளேக் கேட்க விரும்புகிறது என் உள்ளம் , ஆல்ை, அவர் வந்து வரைந்து கொள்ளவில்லையே என்ற வருத்தத்தின் விளைவாய்த் தோன்றிய என் உடல்நலக் கேடு, என்னே அதுவரை வாழவிடாதுபோல் தோன்றுகிறது. வேனிற் காலத்தில், தேரைகள் காணக் கிடைக்காததுபோல்: அவர் புகழைக் காணமாட்டாதே யான் இறந்து விடுவேனே “ எனக் கூறி வருந்தினுள் ; காதலன் புகழில் காதலி காட்டும் ஆர்வம்தான் என்னே!