பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 நற்றிணை

நாடன், இன்ன நிலையன் ; பேரன்பினன் எனப் பன்மாண் கூறும் பரிசிலர் நெடுமொழி வேனில் தேரையின் அளிய காணவிடுமோ தோழி என் கலனே?’ 1

கடனறிந்த கணவனை விரும்புவாள் :

இல்லற வாழ்வு, தம்மால் இயன்ற அளவு பிறர்க்குப் பயன்பட வாழும் வள்ளன்மை உடையார்க்கே உரியது ; தம்விடு நோக்கி வருவாரை விரும்பி வரவேற்று, விருங் தளித்து அனுப்பும் வாழ்வே இல்வாழ்வாம் ; இல் வாழ்வின் இயல்பு அதுவே. இருந்து ஓம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு. அவ்வாறு வருவார்க்கெல்லாம் வாரி வழங்கி வாழ்தல், வற்றப் பெருஞ்செல்வம் வாய்த்தார்க்கு மட்டுமே வாய்க்கும். அப் பெரும் பொருள், தளரா முயற்சி உடையார்க்கே உண்டாம்; ஆகவே விருந்தோம்பி வாழும் இல்லற வாழ்வு, இடையரு முயற்சி உண்டயார்க்கே ஆகும். ‘ தாளாண்மை என்னும் தகைமைக்கண். தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு.” -

மனேவியாவாள், மனேயற மாண்புகள் மிக்க மாட்சிமை யுடையளாவள் அறவோர்க்கு அளித்து, அந்தணர் ஒம்பி, துறவோரைப் பேணிவாழும் பெருவாழ்வே இல் வாழ்வின் பண்பும் பயனுமாம் என அறிந்தவளாதல் வேண்டும் ; அவ்வறவாழ்வு பெறத் தன் கணவன் தளரா முயற்சி உடையதைகல விரும்பி, அவன், அம்முயற்சி மேற்கொண்டு செல்ல விரும்பியவழி, அவனுக்கு விரும்பி விடை அளித்தனுப்பி, அவன் வருங்காறும் ஆற்றி

1. நற்றிணை 347. பெருங்குன்றுர்கிழார். பன்மாண்-அவனுடைய மாண்புகீள் பலவற்றை. நெடுமொழி-புகழ்ச் சொல். தேரை-தவளை. *