பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனையற மாட்சி மிக்க மனைவி 195

யிருத்தல் அவளுக்கு அறநெறியாம்; இவ்வறநெறி கின்றவள் தமிழ்ப்பெண். * ... . “ “. . . .

ஒர் ஆண்மகன் பொருளிட்டிவர வெளிநாடு செல்லக் கருதின்ை. ஆனால், மனைவியைப் பிரிந்து செல்ல அஞ்சிற்று அவன் உள்ளம் , அதனால் அவள்பால் கூறி விடைபெற்றுச் செல்லத் தயங்கினையினும், பொருளின் இன்றியமையாமை, போகாமல் கிற்பதையும் தடை செய்தது. அதல்ை போகத் துணிந்தான் : துணிந்தவன், தன் மனேவியின் தோழியை அழைத்து, அவள்பால் தன் கருத்தை அறிவித்தான் ; உலகியல் உணர்ந்த அத்தோழி, அவன் போக உடன்பட்டாள் ; அவனுக்கு இசைவைத் தந்தவள் அவன் மனேவிபால் சென்றாள். அவள் கணவன் கருத்தையும், அதற்குத் தான் இசைந்ததையும் அஞ்சி அஞ்சி அறிவித்துவிட்டு, அது கேட்டு அவள் வருந்துவளோ என நடுங்கி, அவளேயே நோக்கி கின்றாள். ஆல்ை, அப்பெண்ணுே அவள் எதிர்பார்த்தவாறு, கணவன் பிரிவறிந்து கலங்கின ‘ளல்லள் ; மாருக மகிழ்ந்தாள். தோழியை அன்போடு. தழுவிக்கொண்டு, தோழி ! ஊக்கம் கொண்டு உழைக் காது ஓய்ந்திருத்தல் ஆடவர்க்கு அழகாகாது என்றும் வினேயே விரும்பும் உள்ளம் உடையராய், ஓயாது உழைப்பதே ஆடவர்க்கு உயிராம் ; ஆகவே, கணவர், பொருள் தேடிப் போக எண்ணுகிறேன் ‘ என்றதும், அதற்குத் தடைகூருது, சென்று வருக’ என விடை யளித்துவந்த கின்செயல் நன்று. அங்கன்று புரிந்த உன்னே வாழ்த்துகிறேன்; வணங்குகிறேன். கணவர் பொருள் தேடிப் போவதும், மனேவியர், அவ்வாறு போவாரை, வாழ்த்தி வழியனுப்புவதும் உலகியலா மன்றாே ‘ என்று கூறி மகிழ்ந்தாள் ; என்னே அவள் கடனறி உள்ளம் - * . , -