பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனையற மாட்சி மிக் மனைவி 199

பிறப்புப் பிறிது ஆகுவதாயின்,

மறக்குவேன் கொல் என் காதலன் எனவே 1

காதலன் வினைமுடித்து வருக என விரும்புவாள் :

எடுத்த வினேயை இடையே, விடுத்து வருவான், வாழ்க்கையில் வெற்றி காணுன். ஒரு தொழிலைத் தொடங்கி, அதை முடிவு காண முடித்து, அம்முயற்சியா லாம் பயனே நுகர மாட்டாது, இடையில் கைவிட்டு வருவானே உலகம் பழிக்கும் , அத்தகையான், எத் தொழிலும் மேற்கொள்ளாது வாளா மடிந்திருப்பானினும் இழிவுடையன் ; எடுத்த வினேயை எவ்வகையாலும் முடித்து வெற்றி காணல் வேண்டும் அது முடியுங் காறும் அவன் செயலும் சிந்தனையும், தொழிலே வெற்றி பெற முடிப்பதிலேயே கிற்றல் வேண்டும்; வேறு வினேயில் செல்லுதல் கூடாது சென்றல், எடுத்த விண் கெட்டு விடும் அதல்ை அவனுக்குப் புகழ்க் கேடு உண்டாம்.

பழந்தமிழ்ப் பெண், தன் காதலன், தன்ன விட்டுப் “பிரியாதிருப்பதையே ப்ெரிதும் விரும்புவள்; அவன் பிரிய் நேரின் பெரிதும் வருந்துவள் ஆல்ை, பொருளின் இன்றியமையாமை உணர்ந்தோ, உற்றார்க்கு உதவி புரிய வேண்டுவதன் சிறப்புணர்ந்தோ, நாடு காவல் நலம் குறித்தோ பிரிதல் வேண்டும் என உணர்ந்து, அவன் பிரிந்துபோய் விடுவனுயின், அந்நிலையில் தமிழ்ப் பெண், அவன் அவ்வினையை முடித்து வெற்றி காணவேண்டும் என்பதில் பெரிதும் கவலை கொள்வாள். சென்றவன் வேறு

1, நற்றிணை : 397. அம்மூவனுர்.

நாளும் சென்றென என்பதை முன்னே கூட்டுக; அத்தம்-வழி. வாள்ஒளி, தெளவின-இழந்தன. நீத்து-கைவிட்டு. பிறிது-அறிவுக்கு மாறுபட்ட மயக்கம். பேரும்-விட்டு ஓடும். பாங்காகுவென்-என்ன ஆவேனே ? பிறிது

மக்கட் பிறப்பல்லாத வேறு பிறப்பு.