பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 நற்றிணை

மழையறு மேகத்தால் உச்சி, வெண்ணிறம் காட்ட, பேரழ கோடு விளங்குகிறது அப்பெருமலே வரைகளில் தேனடைகள் ; இடையிடையே, வெண்ணிற அருவிகள் விழும் பேரொலி ; மலேயைத் தன் செங்கிற மலர்களாலும் பொன்னிற மகரந்தப் பொடிகளாலும் போர்த்தி அழகு செய்கிறது வேங்கை மரம் ; இந்த இன்பக் சூழ்கிலேயால் மனம் மகிழ்ந்த மயிற் கூட்டங்கள் ஒன்றுகூடி ஒடி, உதிர்ந்து கிடக்கும் மலர்த்தாதுக்களில் படிந்து ஆடின : தாது படிந்த தோகை, இயல்பாகவே அழகுடைய அம்

மயில்களே மேலும் அழகுடைய வாக்கிற்று அதல்ை,

அகத்தே ஆர்வம் எழ, இன்பக் கிளர்ச்சி மிக்கு உச்சி

மலையை அடைந்தன ; ஆங்கு, மலைகளுக்கிடையே எழும் இளஞாயிற்றின் ஒளிவிழக்கண்டு, உள்ளத்தே இன்பம் ஊற்றெடுக்கத் தம் தோகை விரித்து ஆடி மகிழ்ந்தன. இளஞாயிற்றின் இனிய ஒளியால், உடல் உரமும், உள்ள ஊக்கமும் பெற்ற மயில்கள் ஒடி ஆடும், அழகும் பயனும் நிறைந்தது அம்மலை :

பெய்து போகு எழிலி வைகு மலே சேரத் தேன் தூங்கு உயர்வரை அருவி ஆர்ப்ப வேங்கை தந்த வெற்பு அணி நன்ள்ை பொன்னின் அன்ன பூஞ்சினை துழைஇக் கமழ் தாது ஆடிய கவின்பெறு தோகை பாசறை மீமிசைக் கணங்கொள்பு, ஞாயிற்று உறுகதிர் இளவெயில் உண்னும் காடு, 1

நற்றிணை 396,

எழிலி மேகம். வைகு மலை முன்பு:தான் தங்கியிருந்த மல. வேங் கை-வேங்கை மரம், தந்த-மலர்க் த. பொன்னின் அன்ன நிறத்தால் பொன் போன்ற பூஞ்சினை-பூக்கிளே துழைஇ-படிந்து கமழ்த் து-மனம் விசும் மகரந்தம், ஆடிய பூசிக்கொண்ட, பாசறை-பசிய கற்பாறை கணம்கொன்பு-கூட்டமாகக் , உறு.கதிர்-பயன்தரு கதிரொளி,