பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- Ta:r duali :

. மக்கள் கூடி வாழும் இயல்புடையவர் அவ்வியல் அடையார் ஒருவரை யொருவர் நம்பி வாழ்தல் வேண்டும் , அங்கம்பிக்கை இல்லையேல், அக்கூட்டு வாழ்க்கை பய . னற்றுப் போகும் பகையுணர்ச்சி வளரும்; ஒரு நாட்டில் வர்ழ்பவர், ஓரினத்தைச் சேர்ந்தவர் என்ற தொடர்புடை யார்க்கே அஃது இன்றியமையாதது என்றால், ஈருடலும் ஒருயிருமென ஒன்றி வாழக் கடமைப் பட்டார்க்கு அஃது எத்துணை இன்றியமையாததாகும் ! காதலன்'காதலியின் ஒவ்வொரு சொல்லேயும், ஒவ்வொரு செயலேயும் நம்புதல் வேண்டும் , அவ்வாறே, அவளும் அவனே முழுக்க முழுக்க நம்புதல் வேண்டும் அதற்கு மாருக, அவர் ஒருவரை யொருவர் ஐயுறத் தொடங்குவரேல், அவர் வாழ்வு பாழாம் ; தெளிந்தான்கண் ஐயுறவு தீரா இடும்பை தருமன்றாே ? -

பழந்தமிழ்ப் பெண், தன் காதலன் அன்பில் பெரு, நமபிக்கை வைத்திருந்தாள் அவன் சொல்லில் அசைக்க முடியாத நம்பிக்கை, அவளுக்கு இருந்தது. ர்ே சூழ்ந்த கிலம், தன் கிலேயில் திரிவது இல்லை ; அது தன் நிலை மாறினும் மாறும்; காதலன் கூறிய சொல் மாருது என அக்கணவன் சொல்லில் கம்பிக்கை வைத்து வாழ்ந்தாள்.

காதலன் பொருள்தேடிப் போய்விட்டான் ; போகும் பொழுது, கார்காலம் தொடங்குவதற்கு முன்பே வந்து விடுவதாக வாக்கித்துச் சென்றன் ; அவன் சொல்லில் நம்பிக்கை வைத்துக் காத்துக் கிடந்தாள் காதலி. நாட்கள் பல சென்றன் ; கார்காலம் தொடங்கி விட்டது ; ருேண்ட: மேகம், வானம் முழுதும் நிறைந்து, இடிக்கத் தொடங்கி விட்டது; கார்மேகத்தைக் கண்டும், அதன் இடியோச்ை