பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனையற மாட்சி மிக்க மனைவி 203

கேட்டும், கார்காலம் அதுவெனக் கொண்டு, மயில்கள், தம் தோகை விரித்து மகிழ்ந்தாடத் தொடங்கின. இவற்றைக் கண்டாள் அப் பெண்ணின் தோழி ; கார் காலம் வரவும் காதலன் வக்திலனே எனக் கவலை கொண்டாள் ; தோழியின் கவலையைக் கண்டாள் அப் பெண் ; அவள் அருகிற் சென்று, கார்மேகமே ! காதலர் கார்கால், தொடக்கத்தே வருவேன் எனக் கூறிச் சென்றுளார் என்பது உண்மை ; ஆல்ை இது கார்காலம் அன்று ; அவ்வாருகவும், அவர் கூறிச் சென்றதை அறிந்த ,ே என்னே வீணே வருத்தி, என் துயர் கிலே கண்டு மகிழும் ஆசை கொண்டு, காலமல்லாக் காலத்தில் தோன்றி இடிக்கத் தொடங்கி விட்டனே என்பால் உனக்கு அன்பில்லை ; அதனுல் கார்காலம் தொடங்குவ தற்கு முன்பே தோன்றி என்னே மருட்டத் தொடங்கி விட்டாய். ஆல்ை மேகமே ! நான் மலை நாட்டு மயில் அல்லள் ; இது காலமல்லாக் காலத்தில் எழுந்த மேகம் ; காலமல்லாக் காலத்தில் இடித்த இடி என்பதை அறிந்து *விக்ாள்ள மாட்டாது கார்காலத்து மேகமும் இடியுமாம் எனக் கருதி மயங்கும் மயில்போல் நானும் மயங்கிவிட மாட்டேன் ; உன் வருகை இயற்கைக்கு மாமூனது என் பால் அன்பின்மை காரணத்தால் எழுந்தது என்பதை அறிவேனதலின், உ ன் இன க் கண்டு மயங்குவே னல்லன். இது, உண்மையில் கார்காலமாயின், காதலர் வந்திருப்பர்; அவர் கார்காலத்தே வருவேன் என்றுகூறிச் சென்றுளர் அவர் உரை பொய்யாகாது ; ஆகவே அவர் வரும் காலமே கார்காலமாம் ; அவர் வந்திலர் ; ஆகவே இது கார்காலமன்று ” என்று மேகத்தை கோக்கிக் கூறுவாள்போல், தோழிக்கு உரைத்துக் காதலன்பால் தான் வைத்துள்ள தளரா கம்பிக்கையின் திறம் இது என்பதைத் தெளிவாக உணர்த்தினுள்.