பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 நற்றிணை

கொண்டு வந்து இவண் சேர்த்துவிடும். ஆகவே அவர், உரிய காலத்தில் வந்துவிடுவர் வருந்தற்க “ எனக் கூறினுள். காதலன் சொல்லின் உறுதியில், நட்பின் நலத்தில், அன்பின் பெருமையில் அசைக்க முடியாத கம்பிக்கை கொண்டு, மாரு இயல்பினவாய இயற்கை நிகழ்ச்சிகளையும் நம்ப மறுக்கும் பழந்தமிழ்ப் பெண்ணின் பெருமையைப் புலவர்கள், பாக்கள் பலபாடிப் பாராட்டிக் சென்றனர், - -

கார் எதிர்ந்தன்றால் காலே, காதலர் தவச் சேய் காட்டினராயினும், மிகப்பேர் அன்பினர் வாழி தோழி! நன்புகழ் உலப்பின்று பெறினும் தவிரலர்.” 1

அவள் நடத்தும் இல்லறம் :

“ இருந்தேர்ம்பி இல்வாழ்வதெல்லாம், விருந்தோம்பி வேளாண்மை செய்தற்பொருடடு ‘ என்றார் வள்ளுவர். பலர்க்கும் பயன்பட வாழ்தலே வாழ்வின்பயன: தம்பால் உள்ளது சிறிதளவே ஆயினும், அதிலும் ஒரு பகுதியைப் பிறர்க்கு அளித்து வாழும் பேருள்ளம் வாய்ந்து வாழவேண்டும் ஒருவரின் உள்ளம் விரிய விரிய அவர்க்கு நேரும் துன்பத்தின் எல்லே சுருங்கும்; அதனல் விருந்தோம்பி வாழும் வாழ்வை வற்புறுத்தினர், பழங் தமிழ்ப் பெரியோர் ; விருந்தோம்பி வாழ்ந்தனர் அக்கால மக்கள். அவர் வழிவந்த பழந்தமிழ் மகளிர் விருந்தோம்பி வாழும் விழுமிய வாழ்வு பெறுதற்கே மனேயறவாழ்வு மேற்

1. நற்றிணை 115, - எதிர்ந்தன்று-தொடங்கி விட்டது. காலை-காலேயில். தவச்சேய் நாடுமிகமிகச் சேய்மைக்கண் உள்ள நாடு. உலப்பின்று-அளவின்றி. தவிரலர்வாராது அவன் கில்லார். - - - . . . . . . ‘