பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனையற மாட்சி மிக்க மனைவி 207

கொண்டனர். வருவார்க்கெல்லாம் விருந்தளித்து வாழும். வாய்ப்பை அளிக்கும் என்ற ஆசையிேைலயே அவர்கள் தம் கணவரைப் பலநாள் பிரிந்திருக்கவும் துணிந்தனர்; அக்கணவர் செய்யும் தவறுகளேயும் அது காரணமாய் மறந்தனர். அதனுல், அக்கால மகளிர் நல்ல இல்லறத் தலைவியராய் விளங்கினர்.

ஒரு பெண், பொருள்வளம் கிறைந்த பெருவாழ்வு வாழ்ந்து கொண்டிருந்தாள் ; பலதுரண் கர்ட்டிக் கட்டிய பெரிய வீடு அவள் வீடு. அவ்வீட்டின் ஒவ்வொரு ஆாணிலும் ஒவ்வொரு எருமை கட்டப்பெற்றிருக்கும். கலம் வாய்ந்த கல்லுடல் , சிவந்த மேனி ; காதில் குழை ; கைவிரல்களில் சிறு சிறு மோதிரம்; அழகிய மெல்லிய ஆடை , இது அவள் கோலம்; இத்தகையாள், சோறு ஆக்குதல் முதலாம் இல்லறப் பணிகளேப் பணிப் பெண்கள்பால் ஒப்புவித்திலள். விருந்தினர் விரும்பி உண்ணும் வண்ணம், உணவைத் தானே சமைக்க முனைக் ‘தாள். சமயலறையுள் புகுந்தாள் கண்ணில் புகை படிதலையும் கருதினுளல்லள் ; பிறைத் திங்கள்போல் பேரொளி வீசும் கெற்றியில் வியர்வைர்ே கொட்டுவதையும் பொருட்படுத்தினுளல்லள் ; சோறு, கறி, குழம்பு முதலிய வற்றை வகை வகையாகப் பண்ணினுள்; வாழை இல்யை எடுத்தாள் ; அதன் அடிக்காம்பை அறுத்தெறிந்தாள். எல்லாம் முடிந்தது விருந்தினரை அழைத்து, உண வளிக்க வேண்டியதே ; உடனே, கரிபடிந்தும், வியர்வை நீர் வழிந்தும் மாசுபட்டிருக்கும் முகத்தைக் கழுவி முன்தானேயால் துடைத்துக் கொண்டாள். . *

வந்த விருந்தினர் உள்ளே நுழைந்தார் ; அவரைப் பின்தொடர்ந்து அவள் கணவனும் நுழைந்தான். அவன் பரத்தைவிடு சென்றிருந்தவன் அப்பொழுதுதான்