பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 நற்றிணை

வீட்டிற்கு வந்துளான் ; விருந்தினரோடு சென்றால், மனேவி தன்னே வெறுத்துத் துரத்தாள்; மாருக மகிழ்ந்து வரவேற்பள் என அறிந்து விருந்தினரோடு நுழைந்து விட்டான். கணவன் பரத்தையர் ஒழுக்கம் கண்டு, அவன் மீது கடுஞ்சினம் கொண்டு, அவனே வெறுத்தவள். அவன் வந்தால், வீட்டினுள் நுழையவிடாதே வாயில் அடைத்து வழிமறுக்கக் கருதியிருந்தவள், அவன் விருங் தோடு புகுந்துவிடவே எதுவும் செய்திலள் ; விருந்தினர் முன்னிலையில், கணவைெடு ஊடியிருத்தல் கற்புநெறி யாகாது என உணர்ந்தவளாதலின், அவனேயும் நகை முகம் காட்டி விரும்பி வரவேற்றாள். இருவரையும் அமர்த்தி, அறுசுவை உணவிட்டு உபசரித்தாள். தன் மனேவியின் மனேயற மாண்பு கண்டு மகிழ்ந்ததோடு, தன்பால் உள்ள தவற்றினே, விருந்தோம்பும் விருப்பத் தால் மறந்துபோன அவள் மனத்துாய்மை கண்டு மகிழ்ந்து பாராட்டினன் கணவன். தன் இல்லத்தில், அவ்வின்பச் சூழ்நிலையே என்றும் நிலைபெற, விருந்தின்ர் நாள்தோறும் வருவாராக என வேண்டிக்கொண்டான்:இவ்வாறு, விருந்தோம்பும் விருப்பத்தால், கணவன் செய்யும் கொடிய பிழையையும் மறக்கும் மனேயறத் தலைவி யாய் வாழ்ந்தாள் பழந்தமிழ்ப் பெண். வாழ்க அவள் மனேயறம் ! -

‘’ தடமருப்பு எருமை மடகடைக் குழவி

தூண்தொறும் யாத்த காண்தகு கல்இல், கொடுங்குழை பெய்த செழும் செய் பேதை, சிறுதாழ் செறித்த மெல்விரல் சேப்ப, வாழை ஈர்ந்தடி வல்லிதின் வகைஇப் புகைஉண்டு அமர்த்த கண்ணள் தகைபெறப் பிறைநுதல் பொறித்த சிறுநுண் பல்வியர் அந்துகில் தலையில் துடையினள், கப்புலங்து