பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலே லெம்’ 21.

விலங்கு வாழ்க்கை : .

மக்களின் வாழ்விற்கு வழிகாட்டிகள் மாவினங்களே;

பண்டு, விலங்குகளின் வாழ்க்கை முறைகளைக்கொண்டே, மக்கள், தங்கள் வாழ்க்கை முறைகளே வகுத்துக் கொண்டனர்; மக்களுக்குக் காதலேக் கற்றுக் கொடுத்தன அவ்விலங்குகளே; பெற்ற மகவைப் பிரிந்து வாழா அன்பு வாழ்க்கையை, இனம் காத்து வாழும் இல்லறப் பயன. மானம் இழந்த பின் உயிர் வாழா மாண்புடைமையினை மக்களுக்கு அறிவுறுத்தியன அவ்விலங்குகளே. அறி ஆட்டும் ஆசிரியன் ஒருவன், தான் கூறும் அக்கன் னெறியில், என்றும் பிறழாது கிற்றல்போல், தாயன்பு, கனிந்த காதல், இனங்காத்தல், மானம்உடைமை ஆகிய அப்பண்புகளே இழக்காமல் பெற்று, மக்கள் உணர்ந்து மனம் தெளியுமாறு இன்றும் வாழ்ந்து காட்டுவன அவ். விலங்குகள். காதலை மறந்து, தன் காதலியைக் கை விட்டுக் காட்டு வழியைக் கடந்து செல்லும் ஒருவனுக்குக் காதலே கினேவூட்டி, விரைந்து வீடு செல்லுமாறு துண்டுவன, அவ்விடை வழியில் அவன் கானும் விலங்கு களின் காதற்காட்சிகளேயாகும். . . . . . .

காட்டு விலங்குகள் அனேத்துமே காதலால் கட்டுண்டு கிடப்பவை, அன்பால் பிணக்கப் படுபவை யென்றாலும், களிறும் பிடியும் காட்டும் காதல் போல் சிறப்புடைய காதல் வேறு இல்லை. களிறு, காதலித்த பிடியைப் பிரியாது ; அப்பிடி துயர் உறல் காணப் பொருது : பிடிக்குத் துயர் செய்யும் புலி, ஆற்றலால் பெரியதேனும், அதை அழிக்க அஞ்சாது ; அதைப் போன்றே பிடியும், தன் காதற்களிற்றினேக் கணப்பொழுதும் பிரிய விரும் பாது பிரிய நேரின் உயிர்வாழாது. அத்தகு களிறு பிடிகளின் காதல் வாழ்வினக் கண்டு செல்வோமாக.