பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. உலகியல் உணர்ந்த தோழி

பழந்தமிழ்ப் பெரியோர்கள், தாம் பெற்ற மக்கள், அறிவும் ஒழுக்கமும் வாய்ந்த ஆன்றாேராதல் வேண்டும் என விரும்பினர். விரும்பியதோடு கின்றனரல்லர். கற்பன கற்று, கற்றவழி ஒழுகும் வகையில் அவரை வளர்த்தனர். ஒருவரை, ஒழுக்கநெறி மிக்க உயர்ந்தோ ராக்குவனவும், ஒழுக்கக்கேடு மிக்க இழிந்தோராக்கு வனவும், அவர் இளமைப் பருவத்தில் பெறும் பழக்க வழக்கங்களே யாகும். அப்பருவத்தில், அவர் நல்ல பழக்கவழக்க முடையாாயின், பிற்காலத்தில், அவர், பல்லோர் போற்றும் பெரியோராய் வாழ்தர். அப் ப்ருவத்தே, அவர் தீயொழுக்கநெறி செல்வராயின், பிற்கால வாழ்வில் பலரும் பழிக்கும் இழிந்தோராவர். இளமையின் இவ்வாற்றல் உணர்ந்த பழந்தமிழ்ப் பெரி யோர்கள், தம் இளம் சிறுவர்களின் பழக்கவழக்கங்களே வகுப்பவர், அவ்விளமைக் காலத்தில் அவரோடு சேர்ந்து வாழ்வோரே என்பதையும் உணர்ந்திருந்தனர்.

நல்ல கிலத்தில் நிற்கும் நீர், கன்னிராதல் போலவும் உவர் கிலத்தில் கிற்கும் ர்ே உப்பு நீராதல் போலவும், கல்லோரை நண்பராகப் பெற்றவர் நல்லோராதலும்,