பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 நற்றிணை

வேங்கைவி உகும் ஓங்குமலைக் கட்சி மயில் அறிபு அறியா மன்னே பயில்குரல் கவரும் பைம்புறக் கிளியே.”1

தோழி கூறிய சொற்கள், அப்பெண்ணின் உள்ளத் தில் ஒரு பெரிய புயலைக் கிளப்பி விட்டன : “நான் என் காதலொழுக்கத்தை ஒருவரிடமும் உணர்த்திலேன் : அதை நானும் என் காதலனுமே அறிவோம் ; வேறு எவரும் அறியார் ; அவ்வாருகவும், இத்தோழி எவ்வாறு அறிந்தாள் ‘ என எண்ணிற்று அப்பெண்ணின் உள்ளம் , அவள் மனக் குறிப்பை, அவள் முகக் குறிப் பால் அறிந்துகொண்ட தோழி, பெண்ணே ! நீயும் நானும் ஒருயிரும் ஈருடலும்போல ஒன்றி வாழும் உரிமை உடையமல்லமோ அதனல், உன்பால் உண்டாம் சிறு மாறுதலையும் நான் அறிவேன் ; அத்தகைய நெருங்கிய தொடர்புடைய கான், உன் உடல், அழகு கெட்டுப் பகலில் ஏற்றிய விளக்கொளிபோல் மங்கித் தோன்றுவதையும், பேரழகு தரும் உன் நெற்றி, பாம்பு உண்ட திங்கள் ஒளி குன்றுவதுபோல் பசலே படர்ந்து பாழுற்றுத் தோன்று வதையும் அறியாதிருப்பேனே ? அவை உன் உள்ளக் கலக்கத்தையும், அதற்குக் காரணமாய உன் காதல் ஒழுக்கத்தையும் உண்ர்த்திவிட்டன ; அதனல், அதை நீ அறிவிக்கவேண்டாதே, அறிந்துகொண்டேன்; என்னே யும் ஏமாற்றும் ஆற்றல் உனக்கு உண்டோ ?” என்றாள்: தன்பால் ஒப்படைக்கப்பட்டாளின் உடல் கலத்தில் உண்

1. நற்றிணை : 18. கபிலர். - ஏனல்-தினைப்புனம். வீழ்த்து-கொன்று. பகழி-அம்பு. சேய்அரி.

செவ்வரி பரந்த மழைக்கண்-அருள் நிறைந்தகண் எறிபொன் பிதிரில்.

காய்ச்சி அடிக்கும் இரும்பினின்றும் தெறிக்கும் பொறிகள் போல். விமலர்.

உகும்-உதிரும். கட்சி-கூடு. அறிபு-அறிதல், பயில்குரல்-பருத்த தினைக்

கதிர்கள்.