பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகியல் உணர்ந்த தோழி 215

டாகும் சிறு சிறு மாறுதல்களேயும் ஊன்றி நோக்கிக் காக்கும் தோழியின் கடமையுணர்ச்சி போற்றுதற்குரிய தன்றாே ?

பகல் எரி சுடரின் மேனி சாயவும் பாம்பு ஊர் மதியின் நுதல் ஒளி கரப்பவும், எனக்கு நீ உரைய்ா யாயினை ; கிணக்கு யான் உயிர் பகுத்தன்ன மாண்பினேன் ஆகலின், அது கண்டிசினல் யானே.”1 . அவள் கூறும் அறிவுரை : . தன்பால் ஒப்படைக்கப்பட்ட பெண்ணின் கல்வாழ் வில் காட்டம் உடையவள் தோழி , பெண் பெரிய இடத்தில் பிறந்தவள் செல்வத்தில் சிறந்தவள் ; அதனல் அவள் விரும்பியதையே தானும் விரும்புதல் வேண்டும்; அவள் கருத்திற்குத் தான் அடங்கிப் போதல் வேண்டும் ; அவள் போக்கிற்குத் தடை விதித்தல் கூடாது என எண்ணுள். அப்பெண்ணின் செயலில் பிழை காணின் அதை எடுத்துக்காட்டி, . இடித்துக் கூறித் திருத்த, அவள் சிறிதும் தயங்காள் ;

பெண் பிழை புரியும்வரை பார்த்திருந்து, அதன் பின்னர். அவளைத் திருத்தும் இயல்பும் அவள்பால் இல்லை. பெண் பிழை புரிவதற்கு முன்னரே, அவளுக்கு வேண்டும் - அறிவுரை வழங்கி, அப்பிழை நேராவண்ணம் காப்பாற்

றுவள். பெண்ணின்பால் பேரன்பும், அவளைப் பெரு, வாழ்வில் வாழ்வித்தற்கு வேண்டும் பேரறிவும் அவள்பால் பொருந்தியிருந்தமையால், அவள் துணபெற்ற அப் பெண்ணும் கல்வாழ்வு வாழ்ந்தாள். z

1. நற்றினே 128. நற்சேந்தனர். .

சுடரின்-விளக்குபோல், சாயவும்-ஒளி கெடவும். usialisi-urb பிளுல மறைக்கப்பட்ட, நுதல்-நெற்றி கரப்பவும்-மறையவும். பகுத்தன்ன. ஒன்றை இரண்டாக்கினுல் போன்ற கண்டிசின்-அறிந்து கொண்டேன். ஆல்-ஆசை. . . . . . . . . . . . . . - . . “