பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 - நற்றிணை

காதலன் தகுதி அறிந்து கணவனுகக் கொள் :

மலைநாட்டு மகன் ஒருவன், ஒரு பெண்ணேக் கண்டு காதலித்தான். அவளும் அவனேக் காதலித்தாள். அவர்கள் காதல் வாழ்வைப் பெண்ணின் பெற்றாேர் அறியார் ; அதனால் அவர்கள் காதல் அப்பெற்றேர் அறியாவாறே வளர்ந்து வந்தது. அக்களவு வாழ்வை அப்பெண் விரும்பவில்லை. பெற்றாேர் தரப், பலர் அறிய மணந்து வாழும் வாழ்வையே விரும்பிற்று அவள மனம் ; ஆனல், அவன் அது குறித்துச் சிந்தித்திலன் , களவு வாழ்வில் பேரின்பம் இருக்கக் கண்டு, அவ்வாழ்வில் மேலும் சிலநாள் வாழ விரும்பிற்று அவன் உள்ளம் ; அதல்ை பெண் பெரிதும் கவலை கொண்டாள்; அதை அறிந்தாள் தோழி ; அவன் அப்பெண்ணேக் காதலிக் கின்றானுயினும், அவனுக்கு அவள்பால் உண்மை அன்போ, அருளோ இல்லை. இருக்குமாயின், காதலியின் கவலை கண்டு கலங்காதிரான் ; அவன்.அது செய்திலன் அருளுடையார், தம்மோடு எவ்விதத் தொடர்பும் இல்லா தார் துயரைக் காணவும் கலங்கிக் கண்ணிர் விடுவர் ; இவனே, தன் காதலியின் கண்ணிர் கண்டும் கலங்குவ திலன் , அன்போ, அருளோ உடையார் அவ்வாறு இரார்.

அவன்பால் அன்பில்லே அருள் இல்லை என்பது மட்டுமன்று, அவன்பால் உயர்ந்த ஒழுக்கமும் இல்லை. அறிவறிந்த பெரியோர்கள், களவொழுக்கத்தை விரும் பார். களவைக் கைவிட்டுப் பலர் அறிய மனங்கொள்ளும் வாழ்வையே விரும்புவர். அத்தகைய உயர்ந்த ஒழுக்கத் தையே அவர் உள்ளம் நாடும் ; ஆல்ைபெண்ணின், காதலனே, அவ்வொழுக்க நெறி கிற்க விரும்பவில்லை. இவ்வாறு அன்போ அருளோ ஆன்றாேர் ஒழுக்கநெறி