பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 நற்றிணை தொடங்குவதற்கு முன்பே, அவர் பழகுதற்குரிய பண் புடையவர்தாமா என்பதை ஆராய்ந்து அறிந்து கொள்ளுதல் வேண்டும் ; ஒருவரின் தகுதி, தகுதி பின்மைகள், அவர் தொடர்புகொண்டிருக்கும் நண்பர் களின் தகுதி, தகுதியின்மைகளுக்கேற்பவே அமையும் ஆதலாலும், ஒருவர் இயல்பினே, அக்கண்பர்களின் இயல் பினக் கொண்டே, உலகோர் மதிப்பிடுவர் ஆதலாலும்: நண்பர்களேத் தேடிக்கொள்வார், பெரிதும் விழிப்பா யிருந்து, அக்கண்பர்களின் இயல்புகளே நன்கு அறிந்து கொள்ளுதல் கலமாம். அவ்வாறின்றி, ஒருவரோடு தொடர்புகொண்டு, நெருங்கிப் பழகிவிட்டுப் பின்னர், அவர் தகுதி, தகுதியின்மைகளே ஆராய்தல் அறிவுடைமை யாகாது அவ்வாறு ஆராய்ந்து பார்த்தவிடத்து, அவர் தகுதியற்றவராதல் அறியப்பெறின், இவர் இயல்பறி யாது, இவரோடு கட்புக்கொண்டு விட்டேனே !’ என வருந்த நேரிடும். அங்கிலையில் அவ்வாறு வருந்துவ தல்லது, அவர் தொடர்பை அறுத்துக்கொள்வது இய லாது ; அவர்தரும் தொல்லேகளே, உள்ளம் கொந்தா” யினும் தாங்கிக்கொள்ள நேருமேயன்றி, அவற்றினின்றும் தப்பித்துக்கொள்ளுதல் இயலாது. ஆகவே, அறிவுடை யார், ஒருவரை நண்பராக மேற்கொள்வதன் முன்னரே, அவர்தம் இயல்புகளே ஆராயத் தொடங்கிவிடுவர் : ஆராய்ந்து, அவர் நல்லவர் என்பது அறிந்தபின்னரே, அவரை நண்பராகக் கொள்வர். கொண்டுவிட்டு, அதன் பின்னர் அவர் இயல்புகளே ஆராய எண்ணுர்.

இந்த உண்மை உணர்ந்தவள் தோழி , தான் உண்ர்ந்த உண்மையைத் தக்க இடத்தில், தன்பால் ஒப்படைக்கப்பட்ட பெண்ணிற்கு உணர்த்தும் உயர்ந்தே உள்ளமும் கொண்டிருந்தாள். ஒரு பெண், மலகாட்டிற் குரியோயை ஓர் ஆண்மகனேக்கண்டு காதல்கொண்டாள்;