பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 நற்றிணை

கின்றாய் ; உன் செயல்கண்டு அறிவுடையோர் பழிப்பர் ; ஆகவே, அவன் இயல்புகளே இப்போது எண்ணிப் பார்ப்பதை விடுத்து, அவனே ஏற்றுக்கொள்வாயாக ; அதுவே அறிவுடைமைக்கு அழகாம் “ என இடித்துக் கூறித் திருத்தினள்.

அம்மலை கிழவோன் கம்ாயங்து என்றும் வருந்தினன் என்பதோர் வாய்ச்சொல் தேருய் ; நீயும் கண்டு, நுமரொடும் எண்ணி, அறிவறிந்து அளவல் வேண்டும் மறுதரற்கு அரிய வாழி தோழி! பெரியோர் காடி நட்பினல்லது கட்டு நாடார் தம்ஒட்டியோர் திறத்தே.'1

சொல்லின் செல்வி :

கூடி வாழவேண்டிய கட்டாயம் பொருந்திய இவ் வுலகில், ஒருவர் கருத்தை யொருவர் உணர்ந்து ஏற்றுக் கொள்வது மிகமிக இன்றியமையாதது. உண்மையானது, உறுபயன் தரத்தக்கது, எனத் தம் உள்ளம் உணர்ந்த ஒரு அ கருத்தைத் தம்மைச் சூழ்ந்து வாழும் பிறரும் ஏற்றுக் கொள்ளுமாறு எடுத்துரைக்கவல்ல ஆற்றல் ஒவ்வொரு வருக்கும் வேண்டும் , அச்சொல்லாற்றல் உடையவரே, மக்களே ஒன்றுபடுத்தி வாழச்செய்யும் வகையறிந்தவ ராவர். எத்தகைய பொருளேயும், எத்தகைய நிலையில் உள்ளவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் எடுத்துரைக்க

1, நற்றிணை :32, கபிலர், -

அம்மலை-அழகிய மலை. கிழவோன்-உரிமை உடையோன். நம்யந்துநம்மை விரும்பி, வாய்ச்சொல்-உண்மை உரை. தேருய்-உண்ம்ை என ஏற்றுக்கொள்ளாய். கண்டு-ஆராய்ந்து, துமர்-உன்னேடு ஆடும் தோழியர், எண்ணி-ஆராய்ந்து. அறிவறிந்து-அறியவேண்டுவனவற்றை அறிந்து. அள வல்-காதலித்தல். மறுதரற்கு-மறுத்தற்கு நாடி-ஆராய்ந்து. கட்டு-நட்புக் கொண்டு, ஒட்டியோர்-நட்புக் கொண்டோர்.