பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகியல் உணர்ந்த தோழி 221

வல்ல ஆற்றல் உடையார் ஆணேக்கு, அனைவரும் அடங்கி நடப்பர் , இன்று உலகை ஆள்பவர் வில்விரரல்லர் ; சொல்வீரரே ; சால்வன்மையுடையார், சொல்லும் பொருள், பொருந்தாப் பொருளேயாயினும், அவர் அதை எடுத்துக் கூறும் வகையால், உலகம், அவர் சொல்வதே உண்மையாம், உயர்ந்ததாம் எனக் கொண்டு அவர் காட்டும் வழியில் செல்லும் , அவர் ஆட்டியபடியெல்லாம் ஆடும் , சொல்லாற்றல் வாய்க்கப் பெருத ஒருவர், உண்மைப் பொருளேயே, உயர்ந்த பொருளேயே சொல்லி அனும், அதை எடுத்துக் கூறவல்ல ஆற்றல் இல்லாக் குறையால், அவர் கூறுவனவற்றை உலகம் ஏற்றுக் கொள்வதில்லை. அவர் காட்டும் கல்வழி, நடப்பாரற்றுப் பாழாம் ; அதல்ை ஒவ்வொருவரும் சொல்லாற்றல் உடையராய் வாழ்தல் வேண்டும் , அதிலும், கற்றும், கேட்டும், கண்டும் அறிந்த அறவழிகளேப் பிறர்க்கும் எடுத்துரைத்து வழிகாட்டிகளாய் விளங்க விரும்பும் பெரியோர்கள்பால், அச்சொல்லாற்றல் அமையவேண்டு *வது கணிமிக இன்றியமையாதது. அறிவே உருவாய் வந்து, அறமே வழங்கும் உள்ளம் கொண்டு விளங்கும் தோழிபால், அத்தகைய சொல்லாற்றல் அளவின்றி அமைந்திருந்தது. - . • ,

தினையே காலம் கடந்து கதிர் முற்றுக!

குறவர் குடியில் பிறந்த பெண்ணுெருத்தி தங்கள் தினப்புனத்தில் காவல் புரிந்துகொண்டிருந்தாள்; தினக் கதிரைக், கிளி குருவி முதலாய பறவைகள் கவர்ந்து போகாவாறு காத்து வந்தாள். ஒருநாள் அத்தினேப் புனம் வழியாக வந்த ஒர் இளைஞன் அவளைக் கண்டு, அவள்பால் காதல் கொண்டான். அவன் அழகைக் கண்டும், ஆற்றல் அறிந்தும் அவளும் அவனேக் காதலித்தாள். அன்று