பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 நற்றிணை

அவ்வாறு துணிந்த அவள் மனம், மேலும் ஒருபடி சென்றது , நம் துயர்நிலையை உள்ளது உள்ளவாறே எடுத்துரைப்பினும், அவன் மனம் திருந்தாது; களவின்பத் தில், அது அவ்வளவு ஆழமாக ஆழ்ந்துகிடக்கிறது : அதை அக்களவின்பக் கடலினின்றும் கரை ஏற்றி, மண முயற்சி மேற்கொள்ளுமாறு செய்யவேண்டுமாயின், அதற்கு, நம் துயர்நிலையைச் சிறிது மிகுதிப்படுத்திக் கூறுதலும்வேண்டும் ; ஒரு பெரிய நன்மையை உண்டாக் குதற் பொருட்டு ஒரு பொய் கூறுவதால் பிழை இல்லை. பொய்மையும் வாய்மை இடத்த புரைதிர்த்த நன்மை பயக்கும் எனின் ‘ என்பர் பெரியோர்களும். இவ்வாறு எண்ணிப் பொய்கூறவும் துணிந்தது. அத்தோழியின் து.ாயஉள்ளம்.

அங் கிலேயில் அவனும் வந்தான் ; வந்தவன், மன முயற்சியோடு வருதல் இன்றும் இயலாது போயிற்று : நாளே உறுதியாக அம்முயற்சியோடு வருவேன்’ என வாக்களித்தான் , அவன் வாக்குறுதிகளைக் கேட்டுக் கேட்டு வெறுத்துப்போன அவள், “ அன்ப ! உன் உறுதி மொழி இனி வேண்டாம் ; அது எக்கேடேனும் கெட் டொழிக ; நாங்கள் சாகத் துணிந்துவிட்டோம் ; எங்கள் மானம் மண்ணுகி மடிந்துவிட்டது . இனியும் உன் உறுதி மொழியை நம்பி உயிர்வாழ்ந்திருக்கும் அங்கில கடந்து விட்டது; நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியைக் கூறுகிறேன்; கேட்டு, இனியும் உயிர்கொண்டு வாழ்தல் எங்களால் இயலுமா என்பதை நீயே கூறுவாயாக அன்ப! நேற்று இரவு வந்து இவளேக் கண்டு அளவளாவி மகிழ்ந்துசென்ற நீ, அப்போது இவளே ஆரத் தழுவிக்கொண்டாயன்றாே ? அப்படித் தழுவிக் கொண்டபோது, உன் மார்பிற் பூசிய சந்தனமும், நீ அணிந்துவந்த மாலையில் படிந்துகிடந்த தேனும் மகரந்தமும் இவள் தோளிலும் படிந்துவிட்டன;