பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 - நற்றிணை

மகளின் நல்வாழ்வில் நாட்டம் உடையளாய், அம்மகள் மேனியில் உண்டாம் சிறுமாற்றங்களுக்கும் காரணம் காணத்துடித்துக்கொண்டிருக்கிருள் தாய். இங்கிலேயில் எங்கள் களவு வாழ்க்கை அம்பலமாகாதிருத்தல் அரி தினும் அரிதாம்; இன்று இல்லையாயினும், நாளே அல்லது மறுநாள், அது வெளிப்பட்டுவிடுதல் உறுதி அதன் பின்னர், நாங்கள் உயிர்தாங்கியிருப்போம் என்பது இயலாத செயலாம் ; ஆகவே, உன்வாக்குறுதி, இனி எம்மை வாழவைக்காது ; அது எக்கேடேனும் கெட் டொழிக!” எனக் கூறினுள். தலைவியின் துயர் போக்கத் துணிந்து பொய்கூறிய தோழியின் அன்பு பாராட்டற்குரிய தன்றாே ?

ஓங்குமலைநாட! ஒழிக நின்வாய்மை ! காம்பு தலைமணங்த கல்லதர்ச் சிறுநெறி உறுபகை பேணுது இரவில் வந்து, இவள் பொறிகிளர் ஆகம்புல்லத், தோள்சேர்பு அறுகால் பறவை அளவில மொய்த்தலின், கண்கோளாக நோக்கிப், பண்டும் இனயையோ ? என வினவினள் யாயே ; அதன்எதிர் சொல்லாளாகி, அல்லாந்து என்முகம் நோக்கியோளே அன்னய் ! யாங்குஉணர்ந்து உய்குவள்கொல் என மடுத்த சாந்த ஞெகிழி காட்டி, ஈங்குஆயினவால் என்றிசின் யானே.” 1

1. நற்றிணை : 55. பெருவழுதி.

காம்பு-மூங்கில் தலைமணந்த-நெருங்க வளர்ந்த, கல்.அதர்-மலே இடை வழி. பகை-புலி முதலியவற்றின் பகை. பொறி-தேமல் புள்ளிகள். ஆகம்-மார்பு புல்ல-தழுவ சேர்பு-சேர்ந்து. அறுகால்பறவை-வண்டு. கண்கோளாக-கண்ணுல் கொல்பவள்போல். இனையையோ-இப்படியே இருந்தாயோ. அல்லாந்து-வருந்தி. மடுத்த-அடுப்பில் இட்ட, சாந்த ஞெகிழி-சந்தன விறகு. ஈங்கு-இதல்ை. என்றிசின்-என்றேன். அன்னய் என்பதைக் காட்டி என்பதன் பின்னர்க் கூட்டுக. . . .