பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகியல் உணர்ந்த தோழி 229

அவள் காட்டும் அன்பு : -

தன்பால் ஒப்படைக்கப்பட்டாரைக் காப்பது தன் கடனுகும் எனக் கடமையுணர்வு ஒன்றே உடையவர்.பால் ஒப்படைக்கப்பெறுவார், உயர்ந்த ஒழுக்கத்தினராதல் இயலாது ; அவரைக் காக்க முன்வருவார் உள்ளத்தில் கடமையுணர்ச்சியோடு, அவர் பால் அன்பும் உண்டாதல் வேண்டும் ; அத்தகையார் அவரை அன்புகாட்டி வளர்ப்பர் அறநெறி பிறழாது காப்பர் ; அத்தகையார் வளர்க்க வளர்ந்தவரே ஒழுக்கத்தில் உயர்ந்தோராய் விளங்குவர். இந்த உண்மையை உணர்ந்திருந்ததனால், பழந்தமிழர், தம் மகளிரைக் காக்கும் பொறுப்பினே, அம்மகளிரின் உயிரொத்த துனேவியாய் வாழ்ந்து, அம்மகளிரை வளர்த்த வளர்ப்புத்தாயாம் செவிலியின் மகளாய் வந்தவள்பால் ஒப்படைத்தனர் ; இருவருக்கு மிடையே உள்ள அவ்வுறவு நெருக்கத்தால், தோழி, அப்பெண்ணேத் தன் உடன் பிறந்தவளாகவே கொண்டு, அவ்ஸ் மீது அன்பைச் சொரிந்து காத்துகின்றாள்.

என்பொருட்டாயினும் அவள்பால் அன்புகொள் :

அத்தகைய அன்புமிக்க தோழிபால் ஒப்படைக்கப் பட்ட பெண்ணேக் காதலித்த இளைஞன், யாது காரணத் தாலோ, இடையே சிலநாள் வரத்தவறிவிட்டான் ; அதல்ை பெண் பெருந்துயர் கொண்டாள். அவள் துயரைக்கண்டு வாழ்தல் தோழிக்கு இயலாதுபோயிற்று; “ அழகிலும், அறிவிலும் சிறந்த இவளே மணந்து, இமைப் பொழுதும் பிரியாது வாழக்கருதும் மனம் அவனுக்கு வாய்க்கவில்லையே ; இன்ப உருவாய் விளங்கும் இவள், ! அவன் காதலே ஏற்றுக்கொள்ள யான் எப்பாடுபட் டிருப்பேன். அவள்பால்பெறும் இன்பத்தை மறக்கினும், நான் செய்த அங்கன் றியை எவ்வாறு மறப்பன்?