பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலே 28

உணவும் நீரும் ஊட்டும் களிறு :

மலேயும் வளம் குன்றும் கொடிய கோடைக் காலம் அது ; உணவும், உண்ணு ருேம் அற்றுப்போன கொடுமை மிக்கது அம்மலை , அம்மலையை வாழ்விடமாக்கொண்டு வாழ்ந்தன ஒரு களிறும் ஒரு பிடியும். கோடை ஞாயிற்றின் கொடிய வெப்பத்தால், மலையகத்து மரங்களெல்லாம் வெந்து கரியாயின; சுனேகள் நீர் சுருங்கி உலர்ந்தன; தாம் வாழும் மலை, வளமற்றுப் போகவே, உணவும், உண்னு நீரும் பெருது, தளர்ந்து வாடின. அவ்யானேகள்; தன் ஆண்மைத் திறத்தால், அத்தளர்ச்சியை ஒருவாறு தாங்கிக்கொண்ட களிறு, பிடியின் பசித்துயரைக் காணக் காணத் துயர் தாங்கும் அவ் ஆற்றலே அறவே இழந்து வருந்திற்று. பின்னர், வருந்தி வாளாயிருப்பதிற் பய னில்லை என உணர்ந்தது. பிடியின்பால் கொண்ட காதல், தளர்ச்சியை மறக்கச் செய்தது ஊக்கமும் உரமும் கொண்டு ஓடிற்று. அம்மலேயை அடுத்துச் சென்ற சுரத்து வழியில் வளர்ந்திருந்தது ஒரு ஒமை மரம் ;. மரத் தைக் கண்ட களிறு, அதை முறித்துத் தள்ளிற்று; ஒடிச் சென்று, பிடியை அழைத்து வந்து, ஆர்வம் பெருக அம் மரத்தழை அளித்து அதன் பெரும் பசியைப் போக்கிற்று.

உணவு உட்புகவே, உண்னுநீர் வேட்கை எழப் பெருந்துயர் உற்றது பிடி, அதன் துயர் காணமாட்டாது வருந்திய களிறு, நீர்நிலையைத் தேடி, அவ்வழியில் நெடுந் தொலைவு ஓடிற்று ஆல்ை, நீண்ட அவ்வழியில் நீர் கில் எதையும் கண்டிலது. பிடியின் நீர் வேட்கையைப் போக்கு வது எவ்வாறு எனும் எண்ணம் எழக் கலங்கிகின்ற களிற்றின் கண்களில், கல் கிலத்தே தோண்டிய சிறிய கிணறு ஒன்று பட்டது. அதன் அருகில் ஒடிச்சென்று - கண்டது; ஊற்று அற்றுப்போன அக்கிணற்றில், நீர் -