பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 நற்றிணை

ஒரு நாள் விடியற்காலே, ஊரில் உறக்கம் ஒழிந்து ஒருவரும் எழாத நேரத்தில் அப்பெண்ணே அழைத்து வந்தாள் தோழி ஊர்க்கோடியில், அவள் வரவை எதிர் நோக்கிக் காத்துக் கிடந்த காதலன்பால் ஒப்படைத்தாள்: காதலனும் காதலியும் ஊர் எல்லேயைக் கடந்துவிட்டனர்; அக்காட்சியைப் பின்னின்று கண்டாள் தோழி , அவள் கண்கள் கடலாயின அப்பெண், இன்று இளமைச் செவ்வி குறையாது பேரழகுடையளாய் விளங்குகிருள் ; அவளே அழைத்துச் செல்லும் அவன், அவள்பால் காண லாம் இப்புற அழகைக் கண்டு காதலித்தவனுயின், நாளே அவள் இளமைகழிந்து, அழகு இழந்துபோகும் அப்போது அவளேக் கைவிட்டுவிடுவனே ? அவ்வாறு கைவிட்டு விடுவணுயின், பிரியேன் , பிரியேன் உயிர்வாழேன் என இன்று உரைத்த அவன் வாய்மை ஒன்றையே உறு துணேயாய் நம்பி, உற்றாரையும், பெற்றாேரையும் மறந்து போகும் அவள் கிலே என்னும் ?’ என எண்ணினுள் ; அவள் கலக்கம் கரைகடந்து பெருகிற்று ; உடனே விரைந்து ஓடினுள் தன் தோழியின் இரு கைகளேயும். பிடித்து, இளேஞன் கைகளோடு இறுகப் பிணத்துவிட்டு அவனே நோக்கி, அன்ப இவள், இன்று பெற்றிருக்கும் இளமை கழிந்து போய், முதுமை உற்றபோதும், இன்று தளராது நிமிர்ந்து நிற்கும் இவள் கொங்கைகள் தளர்ந்து தாழினும், பொன்னின்மேல்பதித்த நீலமணிபோல், பொன்னிற மேனியில் தாழ்ந்துகிடக்கும் இவள் கருநிறக் கூந்தல் நரைத்து வெண்ணிறம் பெறினும், நீ இவளேக் கைவிடுதல் கூடாது ; இதுவே என் வேண்டுகோள் ‘ எனக் கண்கள் நீர்வழியக் கைகூப்பி வேண்டி விடை கொடுத்தாள் என்னே அவள் அன்பு !

அண்ணுந்து ஏந்திய வனமுலை தளரினும், பொன்னேர் மேனி மணியின் தாழ்ந்த