பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகியல் உணர்ந்த தோழி 233

கல்கெடும் கூந்தல் கரையொடு முடிப்பினும், நீத்தல் ஒம்புமதி பூக்கேழ் ஊர ! நின், பிழையா கன்மொழி தேறிய இவட்கே.” 1 அவள் கடமை உணர்ச்சி :

கடமையின் சிறப்புணர்ந்தவள் தோழி, தான் உண்டு, தன்மனே உண்டு எனக்கருதும் குறுகிய மனம் கொள்ளாது, தன்னேச் சுற்றி வாழும் தன் உறவினர், தான் வாழும் தன் ஊர் மக்கள் எல்லோரும் வாழவேண்டும் எனக் கருதும் பரந்த மனம்கொண்டு, அதற்கேற்பப் பெரும்பொருள் ஈட்டியும், நாட்டிற்கும் நண்பர்க்கும் துணை புரிந்தும், புகழ்பெற்று வாழ்தல் ஆண் மகன் கடன் ; அவன் அப்புகழாசைகொண்டு வெளிநாடுசென்று வாழுங் காலத்தில், அப்பிரிவுத் துயர் தாங்கி மனேக்கண் இருத் தலும், அவன்தரும் பொருள் துணைகொண்டு விருந் தோம்பி வாழ்வதும் மனேவியின் கடனம் என்பதை அறிந்து, அவர் அக்கடமைகளில் வழுவாது வாழத் துணை புரிந்து வாழ்ந்திருந்தாள் தோழி. . . வினை மேற்செல்க ! விரைந்து மீள்க !

அவர்கள் புது மணமக்கள் ; அவன் ஆண்மை நெறி அறிந்தவன் ; மனேவியின் மாண்புணர்ந்தவன் ; ; மனவி, தன்பால் பேரன்பு கொண்டவள் : தன்னைப் பிரிந்து வாழ்தல் அவளால் இயலாது ; ஆகவே அவளேப் பிரியாமை வேண்டும் ” என்று எண்னும் அவன் காதல் உள்ளம். பிறர்க்குப் பயன்பட வாழும் வாழ்வே பெரு வாழ்வு ; அது பொருள் தேடிப் போகவும், போர் நாடிப் போகவும் அஞ்சா ஆண்மை உடையார்க்கே இயலும் ;

1. நற்றிணை: 10. x

அண்ணுந்து-நிமிர்ந்து. ஏந்திய-உயர்ந்த பொன்னேர்.பொன்ஆன் ஒத்த, மணியின்-நீலமணிபோல் நீத்தல் ஒம்பும்தி-கைவிடாமையைத் கடைப்பிடிப்பாயாக, பூக்கேழ்மலர்கள் மிக்க தேறிய-உறுதியென நம்பி,

15 .