பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகியல் உணர்ந்த தோழி 235

சேறும் சேறும் என்றலின், பலபுலங்து சென்மின் என்றல் யான் அஞ்சுவலே , செல்லாதீம் எனச் செப்பின் பல்லோர் நிறுத்து எறி புன்சொலின் திறத்து அஞ்சுவலே , அதஞல், சென்மின் சென்று வினை முடியின் ;

- சென்று ஆங்கு

அவண் நீடாதல் ஒம்புமின்.” 1 - x’

மதியிழந்த மழை கண்டு மருளாதே

கணவன் பொருள் தேடிப் போய்விட்டான் ; போகும்

பொழுது கார்காலத் தொடக்கத்தில் வந்துவிடுவேன்

என்று வாக்களித்துச் சென்றான் , மனேவி, அவன்

வாக்குறுதியை நம்பி வருத்தம் ஒழிந்து வாழ்ந்திருந்தாள். சில நாட்கள் சென்றன ; கார்காலம் பிறந்துவிட்டது :

கார்காலத்தில் மலரும் இயல்புடையன பிடவும், கொன்றையும், காந்தளும் மலந்துவிட்டன. அவை மலர்ந்து விட்டமை கண்ட காதலி, ‘ கார்காலம் வந்துவிட்டது :

அவர்வந்திலர் ” என வருந்தினுள் : இங்கிலையில் அவளத் தேற்ற வழியறியாத தோழி, அப்பெண்ணே நோக்கி, பெண்ணே ! நம காதலர் சொல் பொய்யாகாது என்பதை நீ அறிவாய் , ஆகவே, அவர் கூறிச் சென்ற வாறே கார்காலத் தொடக்கத்தில் வருதல் உறுதி ! ஆல்ை, கார்காலம் இதோ வந்துவிட்டதே அவர் வந்திலரே என வருந்துகின்றன ; உண்மையில் இது கார்காலமன்று அவ்வாருயின் கார்காலத்தே மலரும்

1. நற்றிணை 229.

சேறும்-செல்வோம். புலந்து-வருந்தி. சென்மின்-செல்லுங்கள். அஞ்சுவல்-அஞ்சுவேன். செல்லாதிம்-செல்லாதீர்கள். செப்பின்-சொன் குல். பல்லோர்-உலகோர் நிறத்து-மார்பில், எறி-வீசுகின்ற, புன் சொல்-பழிச்சொல். திறத்து-அதற்காக நீடு ஆதல்-காலம் நீட்டிப்பதை. ஒம்புமின்-கைவிடுங்கள். - - -