பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 நற்றிணை

இயல்புடைய மலர்கள் மலர்ந்துவிட்டனவே என்று கேட்டல் கூடும் ; இம்மலர்கள், காலமல்லாக் காலத்தில் மலர்ந்துள்ளன ; மழைபெய்வது கார்காலத்தில் என்ற கருத்துடைய அம்மலர்கள், மழை பெய்தது கண்டு மலர்ந்துவிட்டன . ஆல்ை. இது கார்காலத்து மழையோ என்றால் இல்லை. அறிவில்லாமையால் இது எந்தக்காலம் என்பதை மறந்துவிட்ட மேகம், இக்காலத்தைக் கார்காலம் எனத் தவருகக் கருதிவிட்டது ; அதனுல் கடல் நீரைக் குடித்துவிட்டது , பின்னர் இது கார்காலம் அன்று என்பதை உணர்ந்துகொண்டதாயினும், உண்ட நீரை உரியகாலம்வரைத் தாங்கி நிற்க மாட்டாமையால் பெய்து விட்டது . அதல்ை உண்டாய மாறுதல் இது ; உண்மையில் இது கார்காலமன்று ; ஆகவே காதலர் வாராமை கண்டு கலங்காதே’ என்று கூறித் தேற்றினுள்.

“ தாம் வரத் தெளித்த பருவம் காண்வர

இதுவோ என்றிசின் மடங்தை ! மதியின்று, மறந்து கடல் முகங்த கமம்சூல் மாமழை பொறுத்தல் செல்லாது இறுத்த வண்பெயல் கார் என்று அயர்ந்த உள்ளமொடு தேர்வில பிடவும், கொன்றையும், கோடலும் மடவ ஆகலின் மலர்ந்தன. பலவே.” 1

அவன் சென்றது ஆக்கந்தேட அல்லவோ ?

- காதலன் குறித்துச் சென்ற காலமும் கடந்து விட்டது ; ஆனால் அவன் வந்திலன் ; காதலியின் துயர்

1. கற்றிணை : 99, இளந்திரையஞர். தெளித்த-வாக்குறுதி அளித் காண்வர-அழகு பொருந்த என்றி சின்-என்று கேட்கின்றன. மதிஇன்று-அறிவில்லாமல், கடல்முகந்த-கடல் நீரைக் குடித்த. கமம்குல் மாமழை-கிறைந்த நீர் குடித்துக் கருத்த கார், மேகம். பொறுத்தல் செல்லாது-தாங்கமாட்டாமல், இரத்த-பெய்த. யெல்-பெருமழை. கார்-கார்காலம். அயர்ந்த-மறந்து மயங்கி.” தேர்வில. ஆராயாது. கோடல்-காந்தள். மடவ-அறிவற்றன. “ . . . . . . . . . . . .