பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238, நற்றிணை

கட்டோர் ஆக்கம் வேண்டியும், ஒட்டிய கின்தோள் அணிபெற வரற்கும் அன்றாே, தோழி அவர் சென்ற திறமே ?’ 1

அவள் அருள் உள்ளம் :

உலக வளத்திற்கும் வறுமைக்கும் காரணம் பல இருப்பினும், வானம் வழங்குவதும், அது பொய்த்துப் போவதுமே தலையாய காரணங்களாம். மழை பெய்தால் உலகம் வாழும் ; அது பெய்யாது பொய்த்தால், உலகம் வாடும். அதல்ை மழையைக் காணுது கலங்கும் உலகம்’ அதன் வருகையை எதிர்நோக்கி ஏங்கித் துயருறும் ; அதுவரக் கண்டு கழிபேரின்பம் கொள்ளும்; உலகெலாம் வாழ வேண்டும் என விரும்பும் உயர்ந்த உள்ளம் உடையவள்தோழி. உலகம் வறுமையுற்று வாடின் அவள் உள்ளமும் வாடும் ; அவ்வுலகம் வளம் பெற்று மகிழின் அவள் உள்ளமும் மகிழும். தோழியின் இவ்வுயர் உள்ளம், அவள் எடுத்தாண்ட அழகிய உவமை ஒன்றால்

புலம்ை. . . . . --

பொருள் தேடிப் போயிருந்தான் காதலன்; அவன் பிரிவால் வாடினுள் காதலி, அவள் கிலே கண்டு வருங் தினுள் தோழி , அதல்ை அவன் வருகைக்காகக் கண்ணிர் சொரியக் கலங்கிக் காத்துக் கிடந்தாள். ஒரு நாள், காதலன் வினே முடித்து வந்து சேர்ந்தான், அவன் வருகை கண்டு மகிழ்ந்தாள் தோழி , மகிழ்ந்த உள்ளம் உந்த, ஒடிச் சென்று காதலிக்கும் உணர்த்தினுள்.

1. நற்றிணை . 256. துறைக்குறும்ாவின் பாலங்கொற்றனர்.

மன்ற-உறுதியாக செலீஇயர்-செல்லக்கடவதாக, புனே இழை . அணிந்த அணிகள். நெகிழ-கழல, நொந்து நொந்து-மிக வருந்தி. இனதல். . வருந்துவதை. ஆன்றிசின்-பொறுப்பாயாக ஆய்இழை-ஆராய்ந்த அணிகளை உடையாய், நினையின்-எண்ணிப் பார்த்தல். ஒட்டிய-மணந்த திறம்.

தன்மை, : - - -