பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t

உலகியல் உணர்ந்த தோழி - 339

உணர்த்தியவள், பெண்ணே ! பல்லாண்டுகாலமாக மழையைக் காணுமையால் உலகம் வறண்டு விட்டது. நீர் கிலைகள் எல்லாம் வற்றின உலகத்தில் ஈரம் அறவே அற்று விட்டது; அதனுல் கதிரைக் கருவிலே கொண்ட நெற்பயிர்கள் வாடி உலர்ந்தன ; கிலத்தின் கிலே கண்டு வருந்தின்ை உழவன் ; அந்நிலையில் ஒருநாள் இரவில், பெரு மழை பெய்து ஓய்ந்தது ; நெற்பயிர் நன்கு கதிர் ஈன்று நிறையப் பயன் தந்தது; அது காணும் அவ்வுழவன் உள்ளம் மகிழ்ச்சியால் துள்ளிற்று. தோழி! மழை கண்டு மகிழ்ந்த உழவன் உள்ளம் போல், காதலன் வரவு கண்ட என் உள்ளமும் மகிழ்ச்சியால் துள்ளுகிறது. மழைநீர் பெற்ற நெற்பயிர் போல், நீயும் அவன் அளிபெற்று அகம் மகிழ்வாயாக ‘ எனக் கூறும் அவள் உரையில், அவள் அருள்நிறை உள்ளம் கண்டு, உலகம் அவளேப் பாராட்டுமாக.

“ நாடன், வந்தனன்: வாழி தோழி! உலகம்

கயங்கள் அற்ற பைதறு காலப்

பீளோடு திரங்கிய கெல்லிற்கு

கள்ளென் யாமத்து மழை பொழிந்தாங்கே “ 1

1, நற்றினை : 22. . . கயம்-நீர்நிலை. பைதுஅறு-ஈரம் அற்ற, பீள்-கதிரைக் கருவில் கொண்டிருக்கும் நிலை. திரங்கிய-வாடிய, நள்ளென் யாமம்-இரவின் இடை LT,