பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்பின் திருவுருவாம் 57. 241

குறித்துத் தாய் கவலை கொள்வதில்லை. ஆனல், மகளே, மனேயற நெறியறிந்த மாண்புடையளாய், காதல் நெறி சென்று கற்புநெறிபுகும் அறிவுடையளாய், பிறந்த குடியின் பெருமை காக்கும் ஒழுக்க நெறி உணர்ந்த உயர் வுடையளாய் வளர்க்கும் பொறுப்பினே, உலகம், தாயிடத்தில் ஒப்படைத்துள்ளது. மகளே அழகும் அறிவும் உடையளாய் வளர்த்து அகமகிழ்வாள். அவள் மனங்கொண்டு கணவன் மனபுகும் வரை, அவள் கற்பு நெறிக்கு இழுக்கு நேராவாறு விழிப்பாயிருந்து காப்பள். மகள் காதலுணர்வு கொண்டனள் என்பதை அறிந்த தாய், காதலன் எத்தகையனே ? அவன் கல்லணுதல் வேண்டுமே எனப் பெரிதும் கவலை கொள்வள்; மகள் தகுதியுடை யானேயே காதலித்தாளாயினும், அதைப் பெற்றாேர் அறிந்து, அவளே அவனுக்கு மணம் தரும் வரை காத்திராது, காதலனுடன் போய்விடுவளாயின் பெரிதும், வருந்துவள். மனந்து கணவன் மனபுகுந்த மகள்,

ஆண்டுச் செய்யும் மனேயற மாட்சி கண்டு மகிழ்வள்.

அதன் பின்னரே, அவள் மனம் அமைதி கொள்ளும். அத்துணேப் பேரன்புடையவள் பெற்றதாய்.

பெருமூச்செறிந்தாள் :

மகள் உள்ளத்தில் காதல் விதை விழுந்து விட்டது. ஒர் ஆண்மகனேக் கண்டு காதல் கொண்டாள். இருவரும்

தனிமையில் கண்டு அளவளாவத் தொடங்கினர்;

அக்காதல் உறவால், அவள் நிலையில் மாறுதல் கண்டது. அவள் கூந்தல் புது மணம் விசிற்று; தாயின் காவல் கடுமையால், காதலனே விரும்பும்போதெல்லாம் கான

முடிய வில்லையே என்ற கவலையால், நெற்றியில் சிறிதே

ப்சலே படர்ந்தது. மகள் மேனியில் நிகழ்ந்த இம்மாற்றங் களேத் தாய் கண்டாள், மகள் காதல் வலையுள் வீழ்ந்து