பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 நற்றிணை

விட்டாள் என்பதை, அவை காட்டின. அதனுல் கோபம் கெர்ண்டாள். கண்ணினும் அருமையாக வளர்த்த தன் மகளைப் பற்றிய இக்காதல் வெறி, அவளே எங்கிலக்குக் கொண்டு செல்லுமோ எனும் கவலை தோன்றப், பெரு மூச்செறிந்தாள். மகள் மேனியில் மாறுதல் நிகழக் கண்டமையால், அவள் காதல் கொண்டாள் என அறிந்தாளேனும், அவள் காதல் உறவைக் கண்னெதிர் காணவில்லை. அதனல்,அவளேக் குற்றம் கூறிக் கண்டிக்க முடியவில்லை. ஆனல், மகளின் மாறுதலைக் கண்ட பின்னர், கண்டிக்காதிருக்கவும் முடியவில்லை. அதல்ை, யாரோ தவறு செய்தார்போலவும், அவர்களேக் கண்டிப்பாள்போலவும், மகள் எதிரில், அவள் உள்ளத்தில் படுமாறு பேசத் தொடங்கிள்ை. தாயின் சுடுசொல் கேட்டு மகளும் அம்மகளுக்குத் துணைபுரியும் தோழியும் அஞ்ச லாயின்ர் மகளின் காதல் ஒழுக்கத்தை அறிந்தும் அவளேக் கண்ணெதிர் நிறுத்திக் கண்டிக்க மாட்டாது கலங்கும் தாயின் பெருமூச்சொன்றே, அத்தாய் அன்பைப் புலப்படுத்தப் போதியதாதல் அறிக. r

- “ நெறிபடு கூழைக் கார் முதிர்பு இருந்த

வெறி கமழ் கொண்ட காற்றமும், சிறிய பசலே பாய்தரு துதலும் நோக்கி வறிது உகு நெஞ்சினள், பிறிதுஒன்று சுட்டி வெய்ய உயிர்த்தனள் யாயே ; ஐய! அஞ்சினம்; அளியம் யாமே ; 1

1. நற்றின. 368. கபிலர். . . . . > * -

நெறிபடு கூழை-அடர்ந்த கூந்தல். கார் முதிர்பு-கருநிறம் பெற்று. வெறிகமழ்-நறுமணம் வீசும், வறிது-பயனின்றி. உகு-கலங்கும். நெஞ்சினள். உள்ளம் உடையவள். வெய்ய உயிர்த்தனள்-பெருமூச்செறிந்தாள். பாய். தாய். அளியம்-இரங்கத் தக்கேம். ... .. ! .