பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்பின் திருவுருவாம் தாய் 243

நோய் நீங்க நீராடச் செல்க என்றாள் :

மகள் போக்கில் மாறுதல் பெருகிற்று; உடல் தளர்ந்தது; நெற்றி ஒளிகுன்றிப் பசலை படர்ந்தது. அது கண்ட தாய், இனியும் வறிதே பெருமூச்செறிந்து வாய் மூடிக் கிடப்பின் கேடாம் எனக் கருதினுள். மகள் நோய், காதல் நோயே எனக் கண்டாள் ; தினேப்புனம் காத்திருந்தபோது, காதலைேடு புனலாடி மகிழ்ந்த வாறு, தினேப் புனக் காவல் ஒழிந்து போக, இப்போது ஈங்கு வந்து அடைபட்டுக் கிடப்பதால், ஆடியும் பாடியும் மகிழ முடியாமையால் வந்த வாட்டமே இவள் நோய்க்குக் காரணமாம் என் அறிந்தாள் ; அதுவே காரணம் என்பதைத் தான் அறிந்து கொண்டதைத் தன் மகளுக்கு அறிவித்து அடக்க வேண்டும் எனக் கருதினுள், உடனே மகளின் தோழியை அழைத்தாள் மகளே! நேற்றிரவு நம் மலேச் சாரலில் பெருமழை பெய்தது; அதனல் காட்டாம் றில் புது வெள்ளம் பெருக்கெடுத் தோடுகிறது; காய்ந்து ஆஉதிர்ந்த இலச் சருகுகளேயும், மலர்ந்து மணம் காறும் மலர்க் கொத்துக்களேயும் அடித் தோடி வரும் அப்புதுப் புனல் இவள் நோய் நீக்கும் கல்ல மருந்தாம் என எண்ணு கிறேன். அந்நீரை உண்டால், ஒடும் அதன் அழகைக் கண்டால், அதில் புகுந்து ஆசைதிர ஆடினல் இவள் நோய் அகலும் ; ஆகவே இவளே அழைத்துச் சென்று ஆடி வருக ‘ எனக் கூறிள்ை. * -

மகளுக்கு நோய் என்றல், அது தீர மருந்தளிக்கும் மருத்துவன்பால் அனுப்பாது, புதுப்புனல் ஆட ஆனுப் புதல், உண்மையில், அவளே ஆடஅனுப்பும் கருத்தா லன்று ; காதலனோடு அவள் புனலாடி மகிழ்ந்ததையும் அம்மகிழ்ச்சி இப்போது இல்லாது போயிற்றே என்ற ஏக்கமே அவள் நோய்க்குக் காரணமாம் என்பதைத்