பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 நற்றிணை

தான் அறிந்துகொண்டதையும் அவளுக்கு அறிவித்து - அடக்கவே ஆகும் அவள் எதிர்பார்த்தவாறே மகளும் அஞ்சினுள் ; தாய், செல் ’ எனச் சொல்லியவுடனே அவள் செல்லவில்லை. தாயின் கருத்து யாதோ அன்பால் அனுப்புகின்றனளோ? அல்லது, நாம் மறைக்கவும் மறைந்துபோகாது, வெளிப்பட்ட நம்காதல் ஒழுக்கத்தை அறிந்துகொண்டு சினந்து . கின்றனளோ? அவள் உரைத்தன கேட்டு, என் உள்ளம் நடுங்குகிறது” எனக்கூறி ஆடச் செல்லாது அஞ்சி அடங்கினுள்.

‘யான்அஃது அஞ்சினேன், கரப்பவும் தான்.அஃது

அறிந்தனள் கொல்லோ ? அருளினள் கொல்லோ ? எவன்கொல், தோழி! அன்னே கண்ணியது..? வானுற கிவங்த பெருமலேக் கவாஅன் ஆர்கலி வானம் தலைஇ, நடுநாள் கனபெயல் பொழிங்தெனக், கானக் கல்யாற்று முளிஇலை கழித்தன, முகிழ்இனரொடு வரும் விருந்துஇன் தீம்கீர் மருந்தும் ஆகும் ; தண்ணென உண்டு, கண்ணின் நோக்கி, முனியாது ஆடப் பெறின், இவள் - பனியும் தீர்குவள்; செல்க என்றாேளே.'1

த்வறு என்னுடையதே :

தன்களவொழுக்கம் அறிந்து, தாய் கோபம் கொள்வது கண்ட அப்பெண், அங்கிருந்தால் - தன்

1, நற்றிணை : 53. நல்வேட்டனர். .. --- கர்ப்பவும்-மறைக்கவும். எவன்கொல்-யாது. கண்ணியது-கருதி யது, - நிவந்த-உயர்ந்த. கவாஅன்-மலேச்சாரல், ஆர்கலி-இடி இடிக்கும். தலைஇ-சேர்ந்து. நடுநாள்-தள்ளிரவில், கனையெல்-பெருமழை. பொழிக். தென.பெய்ததாக, கானக் கல்யாறு-காட்டிலும் மலையிலும் நுழைந்தோடும் ஆடு: முளிஇல-உலர்ந்த சருகு. முகிழ்இணர்-மலர்ந்த மலர்க்கொத்து. விருந்து-புதிய முனியாது-வெறுக்காது. பணியும்-நோயும்,