பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f

அன்பின் திருவுருவாம் தாய் 245

கற்பிற்குக் கேடுண்டாம் என அஞ்சினுள்; அதனல், அவ் வாண்மகனேடு அவனுTர்க்குச் சென்றுவிட்டாள். பெண்ணின் தாய் உற்றார்க்கு உரியர் பொற்றாெடி மகளிர் ‘ என்ற உலகியலே உணர்ந்தவளாதலின், தன் மகள் தகுதியுடையான் ஒருவனுடன் சென்றது தக்கதே என்று கருதினுளாயினும், தன் அன்பைக் கவர்ந்த அவள் பிரிவு அவளே மிகவும் வருத்திற்று. மணல் பரந்து அழக்ாகத்தோன்றும் தன் மாளிகை முற்றத்தில், தன் மகளோடு ஆடி மகிழும் மகளிரையும், அவர் கூடிஆடும் கொச்சி வேலி அமைந்த ஆடிடத்தையும், அவள் வளர்த்த கிளி, அவளேப் பலமுறை அழைக்கவும் அவள் வாராமை யால் வருந்திவாடுவதையும் காணுந்தோறும், கண்கள் நீர் சொரியக்கலங்கினுள்; ஆல்ை அந்நிலையில், தன்னேவிட்டுப் பிரிந்த மகள் மாட்டுச் சினம் கொண்டிலள் மகள் செயல் அவளுக்குப் பிழையுடையதாகத் தோன்றவில்லே அவள் பிரிவிற்குத் தானே காரணமாம் எனக்கருதினுள். தன் துயர் காணப் பொருது, தனக்கு ஆறுதல் கூறுவர்பால், இவ்வாறு நான் வருந்தப் பிரிந்துபோன என்மகள் iற்றம் உடைய எல்லள் ; அவள்கொண்ட காதல், அருமையும் பெருமையும் உடையது ; அதை நான் அறியாதுபோனேன். ‘உன்மகள் அயலான் ஒருவன்பால் அன்புகொண்டுள்ளாள் என்று ஊர்ப்பெண்டிர் பலர் ஒன்றுகூடிவந்து ஓயாது உரைத்தனர் தக்க பருவத்தில், தகுதியுடையான் ஒருவனத் தேர்ந்து, அவன்பால் அன்பு கொண்டு வாழ்வதே அறநெறியாம் ; அதை என்மகள் அடைந்துவிட்டாள் என்பதை அவர் உரை அறிவித் தலான் இன்பம் தருவதாகத் தோன்றினும், அவர் ஓயாது உர்ைப்பதும், அவர் அதைக் கூறும் முறையும் துயர்தருவவாயின. அவ்வாறு இருந்தும், அவர் கூறக் - கேட்ட பின்னரும், சிலநாள்வரை, அவள் களவொழுக்