பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்பின் திருவுருவாம் தாய் 247

இயற்கையே என்பதை நன்கு அறிந்திருந்தும் தாயின் மனம் அமைதி பெறவில்லை. தன் காதலொழுக்கத்தைப் பேரன்பு காட்டி வளர்க்கும் என்னிடத்தும் கூறவில்லையே; என்னேயும் ஏங்கவிட்டுப் போய்விட்டனளே என்ற ஆகினேவில், அவள் போக்கறிந்து வருந்தாதிருக்கவும் இயல வில்லை. மகளின் இளமைக் கோலமே தன் கண்முன் கிற்கத் தனக்கு ஆறுதல் கூறுவாரிடத்தெல்லாம், விட்டின் முன்புறத்தே நாள்தோறும் நீரூற்றி அவள் வளர்த்த வயலைக்கொடி வளம்பெற்று விளங்குகிறது ; அவள், நேற்று, பந்தும் பாவையும் வைத்துக்கொண்டு, அக்கொடியின் கீழிருந்து ஆடிக்கொண்டிருந்தாள் ; அப் பொழுது, அவளறியாவாறு ஆங்கு வந்த ஒரு தாய்ப்பசு, அவ்வயலைக் கொடியைச் சிறிதே தின்றுவிட்டது. அதைப் பார்த்துவிட்டாள் அவள் ; உடனே பந்தையும் பாவை யையும் அங்கேயே எறிந்துவிட்டு, என்பால் ஓடிவந்து, வயிற்றில் அடித்துக்கொண்டு விம்மிவிம்மி அழுதாள். நானும் செவிலியும் அவளே அருகில் அழைத்து அணேத் :துக்கொண்டு ஆறுதல் உரைத்து, தேன் கலந்த பாலத் தந்து உண்ண வேண்டினுேம். ஆல்ை, அவள் அதை வெறுத்துத் தள்ளிவிட்டு விம்மிவிம்மி அழத் தொடங்கி ள்ை. நேற்று அவ்வாறு அழுத அவள் இன்று, யாரோ ஓர் இளைஞன் கூறிய சொல்லே கம்பி, அவன் பின் சென்று, கடத்தற்கு அரிய காட்டுவழியில் துன்புறுகின்றனளே ; என் செய்வேன் ‘ எனக் கூறிக், கொடிய வழியில் இளம் பெண் அஞ்சுவளே செய்வதறியாது திகைப்பளே ! வருத்தம் அறியாது வளர்ந்தவள், வழியில் அல்லல் அடைவளே என் ஆங்கு அவள்படும் துன்பத்திற்காகத் துயர் உறுதல் அல்லது, அவள் போனது கண்டு புலம்பாத் தாயின் தனியன்பைப் பாராட்டுவோமாக,