பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 - 25

பழியும் அவ் யானே இனத்திற்கு இல்லை. தான் விரும்பும் பிடியானேயைத் தன் உயிர் போமளவும் உடன் கொண்டு மகிழும் உயர்ந்த ஒழுக்க நெறியுடையது களிறு, தாம். ஈன்ற கன்றுகள். தம் பகையை வென்று தனித்து வாழும் வன்மை பெறும்வரை, அவற்றைத் தமக்கிடையே வைத்துக் காக்கும் அன்புடையன யானேகள். -

காதல் வாழ்வு மேற்கொண்டிருந்தன. இரு யானேகள். அவற்றுள் பிடியானே கருவுற்றது; அஃதறிந்து மகிழ்ந்தது களிறு ; பிடி விரும்பி உண்ணும் உணவுப் பொருள்களேத் தேடிக் கொணர்ந்து தந்தது. பிடியுற்ற கருவு முதற் கருவாதலின், அது கேடின்றிக் கருவுயிர்த்தல் வேண்டுமே எனும் கவலை எழவே, களிறு உள்ளூர வருந்திற்று. கரு வுயிர்த்தற்கு ஏற்ற இடத்தைத் தேடிக்காணும் கவலே, அக்களிற்றிற்கு மிக்கது ; அந்த இடம் நீரும் கிழலும் வாய்ந்த இடமாதல் வேண்டும் ; அவை இருந்தால் மட்டும் போதாது, கன்றின்று கிடக்கும் பிடிக்குப், பகை விலங்குகளால் கேடு நேராவண்ணம் அப்பிடியையும், அது ஈனும் கன்றையும் தன் கண்ணெதிரில் வைத்துக் காத்தல் வேண்டும் அதற்கு அவ்விடம் ஒளி மிக்கிருத்தல் இன்றி. யமையாததாம் என்றெல்லாம் எண்ணிற்று ; அம்மலைச் சாரலில் ஒர் இடம் , அருகே, ர்ே இடையருது ஒலித்து ஒடும் அருவி ; நீண்டு வளர்ந்த மூங்கில்களால் நிழல் பொருந்திய அவ்வருவிக்கரை மண்ணுக்கடியில் கிடந்த மாணிக்கக் கற்கள், புழுதியைக் கிளறும் பன்றிகளின் செயலால், வெளிப்போந்து வீசும் ஒளி, இத்தகைய இடத் தைத் தேடிக்கண்டது களிறு ; உடனே சூலுற்ற தன் விடியை ஆங்கு அழைத்துச் சென்றது. ஆங்கே, பிடி கன்றை ஈன்றது. முதற் சூலாதலின் கலங்காத பிடியும் கலங்கிற்று; பெற்றநோய் பெரிதாய் வருத்திற்று. பிடியின் உடல் நோயையும் போக்குதல் வேண்டும் ; கன்றின் பசி

2 -