பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலே நிலம் 27

புலியின் செயலால் சினம் மிக்கது களிறு தன் காதல் மடப்பிடியை, தன் அன்புநிறை இளங்கன்றைத் தாக்கிய புலிமீது பாய்ந்தது. கோடுகளால் குத்திக்கொன்றது. அதன் இரத்தக்கரை படிந்தமையால் சிவந்தன கோடுகள்: புலியைக் கொன்று உயிர் போக்கியதேனும், அவ்விடம் பகை விலங்குகள் உலவும் இடமாதல் அறிந்த கன்று, தன் பிடியையும் கன்றையும், அவ்விடத்தின் நீக்கி அழைத்துச் சென்று, வேறே அரண்மிக்க இடத்தில் சேர்த்தல் வேண்டும் எனத் துணிந்தது. இடைவழியில் அவற்றிற்கு எதம் எதுவும் உண்டாகி விடாவாறு, அவற்றை விடுத்துச் சிறிதும் அகலாது, அணேத்தவாறே அழைத்துச் சென்றது செல்லும் வழியில், வேங்கைமரம் ஒன்று, பொன்னிற மலர்கள் பூத்துப் புது மணம் விசி கின்றது. புலியொடுசெய்த போர் கினேவு, நெஞ்சைவிட்டு நீங்காதே இருந்ததாதலின், பூத்துப் புலிபோல் தோன்ற நின்ற அவ்வேங்கை மரத்தைப் புலி எனவே பிறழக் கொண்டது அக்களிறு, அதல்ை கண்டவுடனே கடுஞ் சினம் கொண்டு அதன்மீது பாய்ந்தது ; பருத்த அதன் அடியைத் தன் கோடுகளால் குத்தி அழித்தது. வேர் அற்று வீழ்ந்தது அம்மரம் அங்கிலயில், தான் அழித்தது தன் பகையாய புலியன்று, தன் இனம் விரும்பும் இனிய உணவாகிப் பயன்படும் வேங்கையாம் என அறிந்து வெட்கம் கொண்டது. பின்னர் அவ் வேங்கையின் பொன்னிறப் பூக்களே, அப்பூக்களிற் படிந்து தேன் உண்னும் ஈக்கள் அஞ்சி அகலுமாறு பறித்துச் சிறு சிறு கவளமாகத் தன் பிடிக்கும் கன்றிற்கும் மாறி மாறி ஊட்டி மகிழ்ந்தது. - - புலியொரச் சிவந்த புலாவஞ் செங்கோட்டு ஒலிபல் முத்தம் ஆர்ப்ப வலிசிறந்து வன்சுவல் பராரை முருக்கிக் கன்றாெடு