பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலே நிலம் o 29

ஆல்ை அம்மகிழ்ச்சியும் நெடிது கிற்கவில்லை; தொட்டியை அணுகி நோக்கியக்கால், பிறவிலங்குகள் உண்டு விடா வசஆறு, அத்தொட்டியின் மேற்புறத்தை, வலிய கொம்புகள் பலவற்றை வில்போல் வளத்துக் குறுக்கும் கெடுக்கு மாகப் பொருத்தி மூடியிருந்தனர் வேட்டுவர் ; அதனல், அதன் கண் உள்ள ைேர முகந்து உண்ணல் அரிதாதல் அறிந்து வருந்திற்று. அவ்வாறு வருந்தியது சிறிது நாழிகையே; பிடியும் கன்றும் தண்ணிர் வேட்கையால்படும் தடுமாற்றம் அக் களிற்றிற்குத் துணிவைத் தந்தது. அதல்ை வில்லை வலிந்து அகற்றின், விசைமிகுதியால், மேலேதெறித்துத் துன்புறுத்தும் என்பதை எண்ணிப் பாராதே அவற்றை அகற்றிற்று ; தடையற்ற நிலையில் தொட்டியில் கிறைந்திருந்த நீரைப், பிடியும் கன்றும் தம் உளமாரப் பருகிப் பசித்துயர் தீர்ந்தன; உண்டுகளே தீர்ந்த அவற்றின் கிலேகண்டு அகம் மகிழ்ந்தது களிறு :

வறன் பொருந்து குன்றத்து உச்சிக் கவாஅன் வேட்டச் சீறும் அகன்கண் கேணிப் பயநிரைக்கு எடுத்த மணிநீர்ப் பத்தர் புன்தலை மடப்பிடி கன்றாேடு ஆர வில்கடிந்து ஊட்டின பெயரும் கொல் களிற்று ஒருத்தல்.'1

பிடியின் காதல் : - * --

களிற்றின் காதற் சிறப்பு இது. இனி பிடியின்

பேரன்பையும் சிறிது காண்பாம் ; காதலால் கட்டுண்டு.

t, EbiT : 92, - வ்றன் பொருந்து-மழை பெரு வறுமை நிறைந்த கவான்-மலைச். சாரல், வேட்டச் சிறார்-வேட்டுவர் சேரி. கேணி-கிணறு. பயநிரைவேட்டுவர்க்குப் பால் அளித்துப் பயன் தரும் ஆனிரை, எடுத்தஅமைத்த பத்தர்-தண்ணிர்த் தொட்டி, !ன் தலை-சிறிய தலை. ஆரஉண்ண. கடிந்து-அகற்றி ஒருத்தல்-யானைத் தலைவன்.