பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/3

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை

லக்கியப் புதையல்’ என்ற தலைப்பின் கீழ், முதல் வளியீடாக ‘நற்றிணை’ என்னும் இந்நூல் இன்று உங்களை மகிழ்விக்க வருகின்றது. சங்க நூற்களில் காணப்படும் அரிய பொருள்களை எல்லாம் எளிதில் யாவரும் கற்றுணருமாறு வெளிப்படுத்துதல் தமிழிற்குச் செய்யும் சீரிய தொண்டுகள் பலவற்றுள் ஒன்றாகும். சங்க நூற்கள் கடினமானவை என்ற அச்சத்தை அகற்றி, யாவரும் சங்க நூற்களைக் கற்குமாறு உணர்ச்சியையும் ஆர்வத்தையும் உண்டாக்கும் முறையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. மற்றும், இந்நூல் வரிசைகள் சங்க நூற் செல்வப் பேழையின் திறவுகோல்களாகவும் இலங்கும் தகையன.

முன்னோர் நமக்குத் தேடிவைத்துள்ள செல்வக் களஞ்சியங்களை நாம் உணராதிருப்பின் நம் தமிழ் மொழியின் அருமை பெருமைகளை நன்குணரமாட்டாதவர்களாவோம். உயர்ந்த கருத்துக்களை விழுமிய நடையில் கொண்டு திகழ்வன சங்க நூற்கள். அவைகளைக் காலத்திற்கு ஏற்ப மக்களுக்குப் பயன்படச் செய்தலே தாய்மொழிக்குச் செய்யும் சீரிய தொண்டு எனப்படும்.

தமிழகத்தில் பண்டு வாழ்ந்த மக்களின் வாழ்க்கை நிலையை உள்ளவாறு தெளிவாக விளக்குவன சங்க நூற்களே. ஆதலின் அவற்றைத் தமிழராவார் நன்கு உணர்தல் இன்றியமையாததே. ‘தமிழ் மொழியில் நல்ல உரைநடை நூல்கள் இல்லையே’ என்ற குறையைப் போக்கவும், சங்க நூல்கள் எல்லாம் செய்யுட்களாக