பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 நற்றிணை

கருத்திழந்து வாழும் கவினுடையது பிடி விலங்குகளில் வன்மைமிக்க யானே இனத்தைச் சேர்ந்ததே யாயினும், பொதுவாகப் பெண்ணினத்திற்குரியதாய, துன்பம் கண்டு தளரும் அச்சம், அவ்வினத்துப் பிடியின்பாலும் பொருந்தியிருக்கக் காண்கிருேம். மேலும், யானே இனத் கிற்குப் பகைவிலங்குகள் பலவாம். இடியேறுகளால் எளிதில் தாக்கப்படுபவை அவை; புலிகளின் தொல்லே பொறுக்கும் தரத்ததன்று மலைப்பாம்புகளும் அவற்றை மறப்பதில்லை. இறுதியாக, போர்ப்பயன் குறித்தும், பொருட்பயன் குறித்தும் அவற்றைக் கைப்பற்றக் கருதுவர் மக்கள். இவர்களால், அவற்றிற்கு எந்த நாழிகை யிலும் இடர் வந்துறும். பொதுவாக,யானேகள் அனேத் திற்குமே இது பொருந்தும் என்றாலும், அவற்றுள் ஆண் யானைகளுக்கு அவ்விடர்ப்பாடு அதிகமாம். அதனல், தான் காதலிக்கும் களிற்றினுக்கு எந்த காழிகையிலும் இடர் வந்துறுதல் உறுதி இடியேற்றுல் இன்னலுறும் ; உணவாதல் குறித்துப் புலியால் கொல்லப்படும்; மலைப்பாம்புகளால் பற்றப்படும் பற்றக் கருதிய மக்கள் பறித்த குழியில் வீழ்ந்து வருந்தல் நேரும் என்பதை அறிந்தது. பி.டி. அவ்வகையால், தன் காதல் களிற்றினுக்கு இன்னல் நேரின், தான் உயிர் வாழ்தல் இயலாது; தனக்கு உணவளித்தும், உண்ணுர்ே காட்டியும் புகை விலங்குகளால் பாழுருவண்ணம் பக்கத்திலிருந்து பாதுகாத்தும் தன் உயிரை ஒம்பும் களிறு இறந்துவிடின் அதற்கு இன்னல் நேர்ந்துவிடின், பெரிதும் வருந்தும்

ஒரு நாள் ஒரு களிறு, தன் பிடியைத் தனியே o விடுத்து வழக்கமாகச் செல்லும் இடத்திற்குச் சென்றது; ஆங்குத் தான் விரும்பும் ஓமைமரத்தளிர்களே உண்ணத்

தொடங்கிற்று அங்கிலயில், அம்மரத்தடியில் காதலனும்