பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலே நிலம் 31

காதலியுமாய் இருவர் அமர்ந்திருக்கக் கண்டது : கண்ட வுடனே, தன் துதிக்கையை வளத்து, உயரத்துாக்கி, உரத்த குரலெடுத்துப் பிளிறிற்று. அது பிளிறிய காரணம் தெரியவில்லை ; காதலிற் சிறந்த அது, தான் காணும் அக்காதற் காட்சியைத் தன் பிடிக்கும் காட்டுதல் வேண்டி அதை அழைத்தல் கருதியோ, அல்லது, ஆங்குத் தமக்கு வேண்டும் தழையுணவு வேண்டுமளவு இருத்தல் கண்டு, அவற்றை உண்ண்த் தன் பிடியையும் பிற இனங்களேயும் அழைத்தல் கருதியோ அது பிளிறி யிருத்தல் வேண்டும். ஆனல், அப்பிளிற்றாெலியைக் கேட்ட அதன்பிடி,அதன் காரணத்தை வேருகக் கொண் டது. களிற்றிற்கு எந்த நாழிகையில், எந்த இடத்தில் இன்னல்நேர்ந்துவிடுமோ எனும் எண்ணத்தால் இடையரு அச்சம் கொண்டு வாழும் பிடி, அப்பிளிற்றாெலியை, இடையூறு உண்டானமையால் வருந்தியகளிறு, தனக்குத் துணைவேண்டி எழுப்பியதாகப் பிறழக் கொண்டது. அவ் வெண்ணம் எழுந்த அங்கிலேயே, அதன்துயர் பெரிதா யிற்று துயர் பொறுக்கமாட்டாது துடித்தது உள்ளத் துயர் உரத்த புலம்பலாய்ப் புறம் போந்தது. வருந்திய அப்பிடி எழுப்பிய பிளிற்றாெலி, அம்மலையையே நடுங்கப் பண்ணி எதிரொலித்தது. பிடியின் பேரன்பால் எழுந்த அப்பிளிற்றாெலி கேட்டு, யானே இனத்தின் காதற் சிறப்புணர்ந்த காதலி, அந்நிகழ்ச்சியைத் தன் காதல ஆணுக்குப் பிறிதொருகாலத்தே கினேப்பூட்டி மகிழ்ந்தாள்.

நினைத்தலும் நினைதிரோ ஐய ! அன்று நாம் பணத்தாள் ஒமைப் படுகின பயங்த பொருங்தாப் புகர்நிழல் இருந்தனமாக, கடுக்கம் செய்யாது, கண்ணுவழித் தோன்றி ஒடித்து மிசைகொண்ட ஓங்கு மருப்பு யானை பொறிபடு தடக்கை சுருக்கிப் பிறிதோர்