பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 நற்றிணை

அறியிடை இட்ட அளவைக்கு, வேறுணர்ந்து என்றுாழ் விடரகம் சிலம்பப் புன்தலை மடப்பிடி புலம்பிய குரலே.'1 காதலால் தன் உள்ளத்தைப் பிணிகொண்டகளிறு கேடின்றி இனிது வாழவும், அதை அறியமாட்டாமையால் அதற்கு ஏதேனும் கேடுண்டாயிருக்குமோ என்ற எண்ணம் எழுந்துவிட்ட காரணத்தால் பெருந்துன்புற்ற பிடி இது. அப்படி இனத்தைச் சேர்ந்த மற்றாெரு பிடி யானே, தன் களிற்றிற்கு உண்டான கடுந்துயரைத் தன் கண்ணுலேயே கண்டுவிட்டது. தன்பால் பேரன்பு காட்டும், தான் விரும்பும் பொருளே எல்லாம் தந்துதவும் களிறு மலேப்பாம்பால் பற்றப் பட்டுவிட்டது. அதன் வாயிடையே சிக்குண்ட அக்களிறு, அதை அழித்து உயிர் தப்புவது இயலாது என்பதை அறிந்து இன்னும் சில நாழிகையில், தன் காதலியை, தன் இனத்தை, தான் வாழும் காட்டை விடுத்து, இறக்கப் போவது உறுதி என்பதை அறிந்த வருத்தம் ஒருபாலும், பற்றிய பாம்பு, தன் உயிரைப் போக்குவான் வேண்டி இதுதுப் பிணிக்கும் பிணிப்பு மிகுவதால் உண்டாம் வருத்தம் மற்றெருபாலும் நின்று வருத்தப் பெரிதும் வருந்தித் துடித்தது. அக்கொடுங் காட்சியைக் கண்டு விட்டது. அதன் காதற்பிடி கலங்கிற்று அதன் உள்ளம்: தணியாத, தாங்க மாட்டாத துயர் மிகுந்தது. தன்

W

1. நற்றின. 318. பாலைபாடிய பெருங்கடுங்கோ. பணத்தாள் - பருத்த அடிமரம். படுசினே-தாழ்ந்த கிளைகள். ாருந்தா-போதாத புகர்நிழல்-புள்ளி புள்ளியாகத் தோன்றும் - ம் நண்ணும்வழி-தாம் செல்லும் இடம் மிசை தொடங்கிய, மருப்பு:யான பொறிபடுந்திய, பிறிதேரர் அறியிடையிட்ட அளவை-பிறிதோர் எழுப்பிய பிளிற்றாெலி என்றுழ்-வெய்யில் பரந்த, ப் பிளவுகள். சிலம்ப-எதிர் ஒலிக்க,