பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலே நிலம் -

உயிரை ஒம்பி வளர்த்த தன் காதலன், தன் கண் முன்னரே வருந்துவதைக் கண்டும், அதன் இறுதி உறுதி யாகிவிட்டது என்பதை உணர்ந்தும் ஒடிச்சென்று உதவி, அதன் உயிரைக் காப்பாற்றமாட்டாத் தன் செயலறுகில் கண்டு சிந்தை கொந்தது. அங்கிலையில் அழுவதல்லாது அதனுல் செய்யக் கூடியது வேறு எதுவுமில்லே. அம் மல்யும், அம்மலைக் குகைகளும் எதிரொலித்து நடுங்குமாறு பெருங்குரல் எடுத்துப் பிளிறிப் பெருந்துயர் உற்று உள்ளம் அழிந்தது அப்பிடி : r

‘’ ஞால்வாய்க் களிறு பாக்தள் பட்டெனத் துஞ்சாத் துயரத்து அஞ்சு பிடிப்பூசல் கெடுவரை விடரகத்து இயம்பும் ‘1. காதல் உணர்ச்சியல்லது பிற எதையும் அறி பாப் பிடிகள் இவை. அக்காத்லுணர்வோடு கடமை யுணர்ச்சியும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற ஒரு பிடி யான, ஆற்றலால், ஆண்மையால் பெருமை மிக்க களிறு ஒன்றைக் காதலகைப் பெற்று வாழ்ந்திருந்தது. சின்னட் கழித்து, அவற்றின் காதற் பயனுய் வந்துதித்தது ஒர் இளங்கன்று. தன் காதலனுேடும், கன்றாேடும் களித்து வாழ்ந்திருந்தது அப்பிடி நெயதல் இலைகளே நிகர்க்கும் எழில் மிக்க நீண்ட காதுகளைப் பெற்றுக் கவின் மிக்க தன் கன்றின் அழகைக் கண்டு அகம் மகிழ்ந்து வாழ்க் திருந்தது ; அந்தோ! அம் மகிழ்ச்சிக்கு அழிவு வந்துற்றது. தன்னேயும் தன் கன்றையும் காத்து கிற்கும் கடமை யுணர்ச்சியால், தனக்கு வரும் கேட்டினே மறக்

1. கற்றினே : 14. மாமூலஞர். - - ஞால்வாய்-தொங்குகின்ற வாய். பாந்தள்-மலைப்பாம்பு. பட்டென. வாயில் அகப்பட்டுக் கொண்டதாக. துஞ்சாத் துயரம்-கெடாத துயரம் ; பெருந்துயரம். பூசல்-பிளிற்றாெலி. நெடுவரை நீண்ட மலே, விட்ரகம்-குகைகள்: - . . . . . .” . .’,'