பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மல்ே நிலம் 35

தன் கன்றிற்கு உணவளித்தும், அதன் ஊறு நீக்கியும் காக்கும் கடமை உண்டாகி விடுவதால், களிற்றினே இழந்த பிடிக்குப் பொறுப்பு அதிகமாம். யானேக் கன்று, இளமையால், தன் தாய் போல் விரைந்து செல்லும் நடையாற்றல் அற்றது ; புலி முதலாம் விலங்கு களினின்றும் தன்னேக் காத்துக்கொள்ளும் மெய்வலி யற்றது. மேலும் அக்காட்டில் பழகி அறியாமையால், தனக்கு அரணுகும் இடம் எது, தனக்குக் கேடாய் முடியும் இடம் எது என்பதை அறிந்துகொள்ளும் அறிவற்றது.: அதல்ை, பிடியானே, தன் கன்றைச் சிறிது பொழுதும் பிரியாது உடனிருந்து பாதுகாக்கும் ; ஒர் இடம் விட்டு ஒரிடம் செல்லும் பொழுது, நடை மெலிந்து பின் தங்குக் தோறும், தனித்து கிற்கும் அதைப் புலி தாக்கி அழித்து விடுமோ என அஞ்சியும், பின் தங்கும் அக் கன்று வழி தவறி விடுமோ என ஐயுற்றும் கின்று கின்று உட னழைத்துச் செல்லும் அன்புடையது அப்பிடி.

‘ குறிவரி இரும்புலி அஞ்சிக் குறுநடைக்

கன்றுடை வேழம் கின்று காத்து அல்கும் ‘1

இவ்வாறு விழிப்பாய் இருந்து காத்து நிற்கும் பொழுதே பிடி, தன் கன்றை இழந்து விடுவதும் உண்டு ; பிடியானே ஒன்று, தான் பெற்ற கன்றாேடு வாழ்க் திருந்தது; வேனிற் காலம் வந்துவிட்டது , வாழும் மலேநாடு வெப்பத்தால் வறண்டு விட்டது ; சுனேகள் நீரற்று விட்டன : தண்ணிர் பெருத் தடுமாற்றம் பெரிதாயிற்று ; நீரின்றி நெடிது நாள் வாழ்தல் இயலாது ; தண்ணீர் வேட்கையுற்றுத் தான் படும் துயரினும், தன் கன்று படும் துயரம் தாங்கற்கு அரிதாதல் உணர்ந்து வருந்திற்று

: 85. நல்விளக்களுர், -

குறிவரி-சிறிய வளைந்த வரிகள். இரும்புலி.பெரிய புலி, குறுநடை. பையச் செல்லும் நடை. அல்கும்-தங்கிச் செல்லும்.