பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 நற்றிணை

அப்பிடி அதனுல், நீர் பெறும் இடத்தை எவ்வாறேனும் தேடிச் சென்றடைதல் வேண்டும் எனத் துணிந்தது. அம்மலைகளே அடுத்துளது ஒரு சிற்றுார் ; குன்றுகள் குழு இருக்கும் ஆங்கு, நீர் கிலேகள் கிறைந்திருத்தலும் கூடும் எனக்கருதிற்று : அதனல், தன் கன்றையும் உடனழைத்துக் கொண்டு அச்சிற்றுார் கோக்கிச் செல்லத் தொடங்கிற்று ; ர்ே வேட்கை மிகுதியால், நீர் கில்கண்டு தன் கன்றிற்கு ஊட்டவேண்டும் எனும் ஆர்வம் மிகுதியால், விரைந்து சென்றது; தன்ைேடு விரைந்து ட்த்தல் தன் கன்றிற்கு இயலாதே என்பதை மறந்தது; அதனல் விரைந்து சென்ற தன் தாயைத் தொடர்ந்து செல்லமாட்டாது பின் தங்கிவிட்டது அக் கன்று. பிடி, சேனெடுத்துராம் சென்றுவிட்டது; கன்றின் கண்ணிற்கும் புலப்படாதாயிற்று ; அது சென்ற வழியை அறிந்து, அதைப் பின்பற்றிச் செல்லுதல் இயலாது போயிற்று எவ்வழிச் செல்வது என்பதை அறிய மாட் டாது செயலற்று கின்று திகைத்தது. அந்நிலையில், மேய்தல் தொழில் முடித்து, தம் ஊர் நோக்கித் திரும்பும் அச்சிற்றுரைச் சேர்ந்த ஆனிரைகள், அவ்வழியே சென்றன. அவற்றைக் கண்ட அக்களிற்றுக் கன்று ஆங்கே தனித்துக் கிடந்து துயர் உறுவதினும், அவ் வானிரையோடு சென்று அவற்றின் வரடைதல் கன்றாம் என உணர்ந்தது. அவ்வாறே, அவற்றைப் பின் தொடர்ந்து சென்று அவற்றின் ஊர் அடைந்தது. தம் ஆனிரையின் வருகையை எதிர்நோக்கி ஊர்ப்புறத்தே கிற்கும் அச்சிற்றுார்மகளிர் தம் ஆன் கன்றுகளின் பின், யானேக் கன்று வரக் கண்டு கலங்கினர். இவ்வாறு, ... -- ‘. . ; ‘o. கண்டு ஊர்ப்பெண்டிர் கலங்க,

கும் இயல்பிற்று யானைக்கன்று: