பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 37 -

“ நீர் கசைக்கு ஊக்கிய உயவல் யானை

வேனிற்குன்றத்து வெவ்வரைக் கவாஅன் கிலம் செலச் செல்லாக் கயங்தலைக் குழவி சேரியம் பெண்டிர் நெஞ்சத்து எறிய ஊர் ஆன் கன்றாெடு புகுதும்.1

புலியின் இரத்த வெறி :

ஆற்றல், அஞ்சாமை, ஊக்கம், உரன் எனும் இவற்றின் உருவம் புலி ; உருவத்தால் சிறியதேயாயினும்; உடல் வன்மையில் ஏனைய உயிர்களினும் சிறந்தது. உயிர் களுள் மிகப்பருத்த உடலமைந்த யானேயை எளிதில் வீழ்த்திவிடும் வன்.ை வாய்ந்தது. காட்டில் பிற விலங்குகள் உளவேனும், புலி, யானையைப் பகைக்குமளவு பிற விலங்குக&ளப் பகைப்பதில்லை. அதைப் போலவே, யானேயும் புலியைக் கண்டு அஞ்சுவதுபோல், பிற விலங்கு களேக் கண்டு அஞ்சுவதில்லை. அவ்விரு உயிர்களுக்கு மிடையேயுள்ள பகை அத்துணைக் கொடியதாம் ; புலி இரத்த வெறிகொண்டது என்ப. அவ் வெறி மிகுதி யினலேயே, அது இரத்தத்தைப் பெரும் அளவில் கொண்ட யானையைத் தேடித் தாக்குகிறது போலும்.

மலையின் இருண்ட குகையொன்றில் வாழ்ந்திருந்தது. ஒரு புலி கோபத்தில் மிகுந்தது அப்புலி ஒரு நாள், தான் வாழும் குகைக்கு அருகே வேழம் ஒன்று வருவ. தைக் கண்டது ; உடனே, தன் குகையை விட்டு வெளி யேறி, அவ்யானையின் புள்ளி பொருந்திய முகத்தின்மீது பாய்ந்து, தாக்குற்ற துன்பத்தைத் தாங்க மாட்டாது

1, நற்றினை 171. - - . . . . . ர்ேகசை-நீர்வேட்கை. ஊக்கிய-மேற்கொண்ட உயவல்-வருத்தம். வெவ்வரை-வெப்பம் மிக்க மலைப்பக்கம். கவாஅன்-மலைச்சாரல், செல்லா-உடன்செல்லமாட்டாத. கயந்தல-சிறிய தல்ை, குழவி. யானைக்கன்று, நெஞ்சத்து எறிய-உள்ளம் கடுங்க புகுதும-நுழையும்.