பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 கற்றிணை

தளர்ந்து வருந்த, அதைக் கொன்று வீழ்த்தியது. வீழ்ந்த அதன். உடலேக் கொழு கொழுவெனப் பருத்த கவுள்களேக் கொண்ட தன் பெரிய வாயால் கடித்து, அதன் குருதியைத் தன் வயிருரக் குடித்தது. பின்னர் குருதி குடித்ததால் கறைப்பட்ட தன் வாயை, வேங்கை யின் அடிமரத்தில் துடைத்துவிட்டு அப்பாற் சென்றது ; என்னே அதன் ஆற்றலும் கொடுமையும் !

விடர்முகைச் செறிந்த வெஞ்சின இரும்புலி புகர்முக வேழம் புலம்பத் தாக்கிக் குருதி பருகிய கொழுங்கவுள் கயவாய் வேங்கை முதலொடு துடைக்கும் ‘1. பிற உயிர்களுக்குக் கேடு சூழ்வதே தொழிலாகக் கொண்ட புலியின் உள்ளமும் அன்பால் நெகிழ்வது உண்டு; தான் விரும்பும் பெண்புலியின்பாலும், அப்பிணவு சன்ற தன் குட்டியின்பாலும் பேரன்புடையது புலி, அவை வருந்த அது பார்த்திருக்காது ; அவற்றின் துயர் போக்க, அது எதைச் செய்யவும் துணியும் , அவற்றின் துயர் துடைக்கும் வினையைத் துணிந்து மேற்கொண்டக் கால், எவ்வித இன்னல் வரினும், அவ்வின்னல் கண்டு அஞ்சாது ; அத்துணை ஆற்றல் மிக்கது புலியின் அன்பு. பெண்புலியொன்று குட்டியின்று கிடந்தது. வேங் கையின் பொன்னிற மலர்களால் தொடுத்த மாலைபோலும் வரிகள் விளங்க வீழ்ந்து கிடக்கும் அக்குட்டிகளின் அழகைக் கண்ட அப்புலிக்கு, அக்குட்டிகளே ஈன்ற அப் பிணவின்மீது பேரன்பு பிறந்தது. அன்போடு அதை அணுகிற்று ஆல்ை அப்பிணவோ, குட்டிகளே ஈன்ற இதறின. 156. வெள்ளக்கு ாேகஞர்.

விடர் முகை-மலைக்குகை செறிந்த-பதுங்கியிருந்த வெஞ்சினம். ய கோபம், புகர்-புள்ளிகள், புலம்ப-வருந்த கவுள் தாடை கள். கயவாய்-பெரிய வாய், வேங்கைமுதல்-வேங்கையின் அடிமரம்.