பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 நற்றிணை

வேங்கை, கப்பு விட்டெரியும் செந்நெருப்புப் போலும் செங்கிற மலர்களால் நிறைந்து மணம் காறும் காலம் ; ஒரு நாள் ஆங்கு வந்தது ஒரு குரங்குக் குட்டி ; கனிமிக இளமை வாய்ந்தது அது தன் இனத்திற்குரிய தொழிலே முற்றக் கல்லாத பருவம் அதன் பருவம் , அம் மனே நோக்கி வந்த அக்குட்டி, அம் மனே முன்றிலிடத்தே, அம் மனேயின் செல்வச் சிறுமி, பொற் கிண்ணத்தில் உள்ள பாலுணவை உண்டு கொண்டிருந்ததைக் கண்டுவிட்டது. அவ்விடத்தை விட்டு அகலாது ஆங்கனே உழலத் தொடங்கிற்று ; சிறுமியின் தாய் பலமுறை விரட்டினுள் அதை அவளே ஏமாற்ற எண்ணிய அக்குட்டி, அவ் விடத்தைவிட்டு அகன்றதுபோல் காட்டி, அவள் அறியா வாறு, அவ் வேங்கை மரத்தில், அடர்ந்து தழைத்துள்ள ஒரு கிளேயில் ஏறி ஒளித்துக்கொண்டது. குரங்கு ஓடி விட்டது என்ற எண்ணத்தால் சிறிது அயர்ந்தாள் தாய்; அவள் அயர்ந்த நிலை நோக்கி, மரத்தினின்றும் திடு மெனக் குதித்து ஓடி, சிறுமியின் கைக் கிண்ணத்தை வலிதிற் கைப்பற்றிக்கொண்டு, மரத்தின் உயர்ந்த கிளேயில் ஏறி அமர்ந்து உண்ணத் தொடங்கிவிட்டது ; கைக் கிண்ணத்தைப் பறி கொடுத்த அப்பெண், திட்டிய மையும் கரைந்து அழகிழக்குமாறு கண்ணிர் சொரிந்து அழுதாள். அழுகை மிகுதியால் செங்காந்தள் மலர் போல் சிவந்துவிட்டன. அவள் கண்கள். அவள் அவ் வாறு அழக் கண்டும், குரங்குக் குட்டி, அவள் பொருட்டு இரங்கி, அக் கிண்ணத்தை அவள் பால்தர எண்ணுது, அவள் அழ அழப் பாற் சோற்றை வாரிவாரி வாயில் திணித்து உண்ணத் தொடங்கிற்று. -

புன்தலை மந்திக் கல்லா வன்பறழ் குன்றுழை கண்ணிய முன்றிற் போகாது,

எரி அகைங்தன்ன வீததை இனர