பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 நற்றிணை

தானும் ஆடவேண்டும் எனும் ஆர்வம் எழுந்தது ; உடனே ஓடி, அக்கயிற்றின் மேல் ஏறி நின்று ஆடத் தொடங்கிவிட்டது ; அதைப் பார்த்துவிட்டனர், அச் சேரிவாழ் சிறுவர்கள் , அவர்கள் மகிழ்ச்சி அளவிறந்து விட்டது . அவ் வாட்டம் நடைபெற்ற இடத்திற்கு அண்மையில் ஒரு மலே அம் மலேயில் வளர்ந்திருந்தது மூங்கில் மகிழ்ச்சி மிகுதியால், மலேமீது ஏறி, வானுற வளர்ந்து கிடக்கும் அம் மூங்கிலே வலிதிற் பற்றி வளேத்து, அதன் மீது ஏறி அமர்ந்தனர் தரையைக் காலால் உந்தி மேலே ஏறியும், கீழே இழிந்தும் ஆடத் தொடங்கினர் ; குரங்கு கழைக் கயிற்றின்மேல் ஏறி ஆட, மலைவளர் மூங்கில்மீது அமர்ந்து தாம் ஆட, அகமகிழ்ந்த அவர்கள், அம்மகிழ்ச்சி மிகுதியால், கையால் தாளம் கொட்டிக் களித்தனர் ; குறச் சிறுவர்க்கு ஆடல் விருப்பத்தை ஊட்டி ஆடப்பண்ணிற்று, கழைக்கயிற்றின் மீது ஏறி ஆடிய அக்குட்டி

கழை பாடு இரங்கப், பல் இயம் கறங்க ஆடுமகள் கடந்த கொடும்புரி நோன் கயிற்று அதவத் தீங்கணி அன்ன செம்முகத் துய்த்தலே மந்தி வன்பறழ்துங்கக், . . கழைக்கண் இரும்பொறை ஏறி விசைத்து எழுந்து குறக்குறு மாக்கள் தாளம் கொட்டும்.'1 கள்ளுண்ட குரங்கு: * விலங்கினத்திற் - பிறந்ததேனும் மக்களோடு பழகி வாழும் பண்புடையது குரங்கு. அதல்ை அம்மக்களின்

1. நற்றிணை: 95. T, DG: .......-..... ... - - பாடு-பக்கத்தில் கழை-மூங்கிலால் செய்த குழல். இரங்க, கறங்கஒலிக்க இயம்-இசைக்கருவிகள். கொடும்புரி-முறுக்குண்டபுரி, நோன் கயிறு-வலிய கயிறு, அதவத்திங்கனி-அத்திப்பழம். துய்த்தல-பஞ்சு போன்ற மெத்தென்ற தல, தூங்க-ஏறி ஆட இரும்பொறை-பெரியமல.

கழை-மூங்கில். பொறைக்கண் கழை என மாற்றுக.