பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலே நிலம் 4

பழக்கவழக்கங்களில் பெரும்பாலனவற்றை மந்திகளும் பெற்றிருந்தன. குரங்குக்குட்டி யொன்று, குறவர் குடியில் வந்த இளஞ் சிறுவர்களின் இனிய தோழய்ை, அவர்கள் போகும் இடந்தோறும், அவர்களேவிடாது பின்பற்றிச் சென்றது. ஒரு நாள் அக்குறச் சிறுவர், தம் குன்றை - அடுத்த சாரலுக்குச் சென்றனர் : ஆங்கு மலேப்பாறை களுக்கிடையே வளர்ந்திருந்தது ஒரு வேங்கை ; அவர்கள் ஆங்குச் சென்ற காலத்தில், அம்மரம் மலர்களால் நிறைக் திருந்தது ; அவ் வேங்கை மலர்த்தேனே உண்ணவந்து மொய்க்கும் வண்டுகளின் இசை காதுக்கு இன்பம் ஊட்ட, அம் மரத்தை அண்ணுந்து நோக்கினர் அம் மரக்கிளே களில் பெரிய பெரிய தேனடைகள் தொங்கின; வண்டுகள் பெருங் கூட்டமாய்க் கூடி, அத் தேனடைகளே மொய்த்துக் கிடந்தன ; அதல்ை, அத் தேனடைகளின் அகத்தே உள்ள தேன், தெறித்துத் துளித்துளியாகச் சிதறி வீழ்ந்தது. இக் காட்சியைக் கண்ட அக் குறச் சிறுவர் மரத்தடிக்கு ஒடிச் சென்று உற்று நோக்கினர். சிதறிய தேன், மலேப் பாறைகளில், ஆங்காங்கே உள்ள சிறு சிறு பள்ளங்களில் நிறைந்து வழிந்து கொண்டிருந்தது. தேனேக் கண்ட சிறுவர் வாயில் நீர் சுரந்தது ; அத்தேனே வாரி வாரி வயிருரக் குடித்துக் களித்தனர். இவற்றை யெல்லாம் கண்டுகொண்டே இருந்தது அக்குட்டி குறச் - சிறுவர் அவ்விடம் விட்டு அகலக்கண்டு, அம்மரத்தடிக்கு விரைந்து ஓடிற்று ; ஒடித் தேன் தேங்கிய குழிகளே நோக்கிற்று அவற்றிலிருந்த தேன் முழுவதும், அச் சிறுவர்களால் உண்ணப்பட்டுப் போயினமை கண்டு, அக் குழிகளுள் தலையிட்டு, காக்கை நீட்டி நக்கி நக்கிச்

சுவைத்து மகிழ்ந்து சென்றது. -

சுரும்பு உண விரிந்த கருங்கால் வேங்கைப் பெருஞ்சினைத் தொடுத்த கொழுங்கண் இரு அல்,